அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

கல்விசார் வெளியீட்டு திறன்களை மேம்படுத்த இணையவழியிலான குறுகிய கால பயிற்சி வகுப்பு இன்று தொடங்கியது

प्रविष्टि तिथि: 01 JUN 2022 3:14PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள அறிவியல் தொடர்புக்கான தேசிய  நிறுவனம் (சிஎஸ்ஐஆர்) மற்றும் கொள்கை  ஆராய்ச்சி அமைப்பின் ஆராய்ச்சி இதழ் பிரிவு கல்விசார் வெளியீட்டு திறன்களை மேம்படுத்த இணையவழியிலான குறுகிய கால பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு செய்துள்ளது. ஜூன் 30 வரை நடைபெறவுள்ள இந்த பயிற்சி வகுப்பு அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி வாரியம், மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை ஆகியவற்றின் ஆதரவில் நடைபெறுகிறது. இதனை சிஎஸ்ஐஆர் இயக்குனர் பேராசிரியர் ரஞ்சனா அகர்வால் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்.

 இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தகவல் தொடர்பில் திறன் பெற்றிருப்பது ஆராய்ச்சியாளர்களுக்கு உயிரோட்டமானது என்றார். இந்த பயிற்சியில் ஈடுபடுவோர் அறிவியல் கட்டுரை எழுதுவதில் திறனை கற்றுக்கொள்ளும் வாய்ப்பை பெறுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நேரடியாக பயிற்சியில் பங்கேற்றனர். ஒரு மாத காலம் நடைபெறும் இந்த பயிற்சியில் விரிவுரைகள், செய்முறை பயிற்சி, சோதனைக்கூட ஆய்வுகள், விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், பத்திரிகை ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் போன்றவை இடம்பெறும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1830077

***************


(रिलीज़ आईडी: 1830125) आगंतुक पटल : 215
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , English , हिन्दी , Bengali , Punjabi