அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

இந்தியா மற்றும் ஜெர்மனியின் அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளை சீரமைக்க வேண்டும் : அறிவியல் தொழில்நுட்பத்துறை செயலாளர்

Posted On: 01 JUN 2022 2:58PM by PIB Chennai

இந்தியா மற்றும் ஜெர்மனியின் அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்த முன்னுரிமைத் துறைகளை சீரமைக்க வேண்டியது அவசியம் என மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை செயலாளர் டாக்டர் எஸ் சந்திரசேகர் வலியுறுத்தியுள்ளார். மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை மற்றும்  ஜெர்மனி ஆராய்ச்சி அறக்கட்டளை இடையே, சர்வதேச ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு ஒன்றை அமைப்பதற்காக அண்மையில் தெரிவிக்கப்பட்ட யோசனையை ஊக்குவிப்பது தொடர்பான இணையவழிக் கருத்தரங்கில் பேசிய டாக்டர் சந்திரசேகர் இதனைத் தெரிவித்துள்ளார். 

நீடித்த எரிசக்தி தொழில்நுட்பங்கள், (உற்பத்தி, மாற்றம் மற்றும்  சேமிப்பு), சுற்றுச்சூழல் மற்றும் தூய்மை தொழில்நுட்பங்கள், உயிரி சார்ந்த பொருளாதாரம், பல்வேறு பயன்பாடுகளுக்கான உயிரி சார்ந்த பொருட்கள்,  உணவு & வேளாண் தொழில்நுட்பங்கள், குறைந்த செலவில் சுகாதார சேவை (மருந்து பொருட்கள் மற்றும் உயிரி மருத்துவ சாதனம் உட்பட) அதிநவீன உற்பத்தி மற்றும் ஒருங்கிணைப்புக்கான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்டவை முன்னுரிமை துறைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இருநாடுகளையும் சேர்ந்த பல்கலைக்கழகங்கள்  மற்றும்  நிறுவனங்களையும் சேர்ந்த 80-க்கும் மேற்பட்டோர் இந்த இணைய வழிக்கருத்தரங்கில் பங்கேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1830069

----


(Release ID: 1830096) Visitor Counter : 138


Read this release in: English , Urdu , Hindi , Punjabi