தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

இந்தியாவின் முதன்மையான ஆவண படவிழா ஞாயிறன்று தொடங்குகிறது

Posted On: 27 MAY 2022 4:47PM by PIB Chennai

இந்திய சினிமாவின் தேசிய அருங்காட்சியகத்தை உள்ளடக்கிய   திரைப்படப் பிரிவு வளாகம், ஆவணப்படம், குறும்படம் மற்றும் அனிமேஷன் படங்களுக்கான 17-வது மும்பை சர்வதேச திரைப்படவிழாவை நடத்த தயாராக உள்ளது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த திரைப்படவிழாவின் துவக்க நிகழ்ச்சி ஒர்லியில் உள்ள நேரு மையத்தில் நடைபெறும். இந்த திரைப்படவிழா உலகம் முழுவதிலும் உள்ள திரைப்பட இயக்குநர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. 30 நாடுகளிலிருந்து 808 விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் 102 படங்கள் போட்டிப்பிரிவில் திரையிடப்பட உள்ளன. 35 படங்கள் சர்வதேச அளவிலும், 67 படங்கள் தேசிய அளவிலும் போட்டிகளில் கலந்து கொள்ளும். 18 படங்கள் மும்பை சர்வதேச திரைப்படவிழாவில் பிரிசம் பிரிவில் திரையிடப்படும்.

சிறந்த திரைப்படத்திற்கு ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசுடன்  தங்கச்சங்கு விருது வழங்கப்படும். ஐந்து முதல் ஒரு லட்சம் ரூபாய் வரையிலான பரிசு வெள்ளிச் சங்கு விருதுடன் வழங்கப்படும். சிறந்த ஆவணப் படத்துக்கு ஒரு லட்சம் ரூபாயும், சிறந்த அறிமுக இயக்குநருக்கு தாதா சாஹேப் பால்கே சித்ரநகரி விருதும் வழங்கப்படும்.

ஆவணப் படப்பிரிவில் சிறந்து விளங்கும் இயக்குநருக்கு, சிறப்புமிகு டாக்டர் வி சாந்தாராம் வாழ்நாள் சாதனையாளர் விருது, ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசு,  தங்கச் சங்கு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். கடந்த காலத்தில் இந்த விருதுகளை புகழ்பெற்ற இயக்குநர்களான எஸ் கிருஷ்ணசாமி, ஷ்யாம் பெனகல், நரேஷ் பேடி,  விஜயா முலே ஆகியோர் பெற்றுள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1828770

-----



(Release ID: 1828810) Visitor Counter : 149