சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான முதன்மை தலைமைக் கணக்காயராக திரு. கே.பி.ஆனந்த் பொறுப்பேற்பு

Posted On: 24 MAY 2022 6:12PM by PIB Chennai

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான முதன்மை தலைமைக் கணக்காயராக திரு. கே.பி.ஆனந்த் பொறுப்பேற்றார். இந்திய தணிக்கை மற்றும் கணக்குச் சேவையில் (IAAS) 1996-ஆம் ஆண்டு இணைந்த இவர், 1994 இல் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றவர்.

இந்தப் பொறுப்பை ஏற்கும் முன், கேரளாவின் முதன்மை தலைமைக் கணக்காயராகவும், வடகிழக்கு எல்லை ரயில்வேயின் தணிக்கை முதன்மை இயக்குநராகவும், அஸ்ஸாமில் தலைமை கணக்காயராகவும் பணியாற்றினார். அவர் ஆந்திரப் பிரதேசத்தின் தெற்கு மின் விநியோக நிறுவனத்தில் இயக்குனராக (நிதி) பணியாற்றியுள்ளார்.

மணிலா மற்றும் ஜெனீவாவில் புலம்பெயர்வதற்கான சர்வதேச அமைப்பு, ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் சர்வதேச கணினி மையம், வெப்பமண்டல நோய்களில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான திட்டம் ஆகியவை அவரது சர்வதேச தணிக்கைப் பணிகளில் அடங்கும்.

            எரிசக்தி, போக்குவரத்து, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், பொதுப்பணித்துறை, மாநில பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் புதுச்சேரி யூடியின் அனைத்து துறைகளும் முதன்மை தலைமைக்  கணக்காயர் (தணிக்கை -II) அலுவலகத்தின் தணிக்கை அதிகார வரம்பிற்குட்பட்ட சில முக்கிய துறைகள் என அந்த அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

****


(Release ID: 1828015)
Read this release in: English