அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

சுற்றுச்சூழல் விதிமுறைகளை நிறைவேற்றவதற்கு இந்திய தோல் தொழில் துறை கரியமிலவாயு வெளியேற்றம் இல்லாத நிலைமையை உருவாக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்


சென்னையில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி கழகம்- சிஎல்ஆர்ஐ பவளவிழா கொண்டாட்டங்களில் அமைச்சர் உரையாற்றினார்

“இந்தியர்களுக்கான வழக்கமான காலணிகளை தயாரிப்பதற்கு 3டி தொழில்நுட்பத்தை பயன்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன”

புதிய கண்டுபிடிப்புகள், அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்கள், குறியீட்டு கட்டமைப்பு ஆகியவை சிஎல்ஆர்ஐ–யின் அடுத்த 25 ஆண்டு பயணத்தின் போது உலக சந்தையில் புதிய முக்கியத்துவத்தை பெறுவதாக இருக்கவேண்டும்; டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 19 MAY 2022 4:57PM by PIB Chennai

சுற்றுச்சூழல் விதிமுறைகளை நிறைவேற்றவதற்கு இந்திய தோல் தொழில்த் துறை கரியமிலவாயு வெளியேற்றம் இல்லாத நிலைமையை உருவாக்க வேண்டும் என்று மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு) புவி அறிவியல் அமைச்சக இணை அமைச்சர் (தனி பொறுப்பு) பிரதமர் அலுவலக இணை அமைச்சர், ஊழியர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள் அமைச்சக இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்

சென்னையில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இன்று பவள விழா கொண்டாட்டங்களில் உரையாற்றிய டாக்டர் ஜிதேந்திர சிங், தோல் பதன செயல்பாட்டில் கரியமிலவாயு வெளியேற்றம் பூஜியம் நிலையை எட்டுவது அவசியம் என்றும் விலங்கு தோலாலாகிய பொருட்களின்  உயிரி பொருளாதாரம் இந்த காலத்தின் புதிய மந்திரமாக உள்ளது என்றும் கூறினார்.  சுற்றுச்சூழல் விதிமுறை அமலாக்கப்படும் நிலையில்   தமிழ்நாடு போன்ற இடங்களில் தோல் தொழில் துறையின் திறன் தேவைகளை கொண்டு செல்ல  திரவம் வெளியேற்றப்படாத நிலையின் அமலாக்கம் தேவைப்படுகிறது. இது தற்போது விவாதத்தில் உள்ளது.

புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் ஊக்குவிப்பு பற்றி குறிப்பிட்ட டாக்டர் ஜிதேந்திர சிங், சிஎஸ்ஐஆர் – சிஎல்ஆர்ஐயின் பவள விழா பயணத்தில் இருந்து நூற்றாண்டு விழா நோக்கி செல்லும்போது தோல் தொழில் துறையின் நிலைத்த தன்மை புதிய சவாலாக உருவாகக்கூடும் என்றார். அடுத்த 25 ஆண்டுகாலத்தில் தோல் ஆராய்ச்சி மற்றும் தொழில் துறைக்கான புதிய தொலைநோக்கு பார்வைக்கு நிலைத்தன்மை, கரியமிலவாயு வெளியேற்றம் இன்மை, தோல் அடிப்படையிலான பொருட்களை மொத்தமாக மறு சுழற்சி செய்தல், விலங்கு தோலால் உருவாக்கப்பட்ட பொருட்களின் உயிரி பொருளாதாரம், தொழிலாளர்களுக்கு சமமான வருவாயை உறுதி செய்தல், குறியீட்டு கட்டமைப்பு ஆகியவை தேவையாக இருக்கும்.

 இந்தியர்களுக்கான வழக்கமான காலணிகளை தயாரிப்பதற்கு 3டி தொழில்நுட்பத்தை பயன்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். இந்த திட்டத்தை செயல்படுத்த முதல் கட்டமாக நாட்டில் 73 மாவட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இணையற்ற விற்பனை பொருட்களை போல் தோல் மூலமான காலணிகள் கால்களை பாதுகாக்கும் தூய்மை  கொண்டதாகவும் அணிபவர்களுக்கு வசதியானதாகவும் இருக்கும்  வகையில் வடிவமைப்பதும், தயாரிப்பதும் அவசியம் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். பாதங்களில் வியர்வையை உருவாக்கும் லட்சக்கணக்கான செல்கள் உள்ளன என்றும், இவற்றின் மூலமான வியர்வையை உள்வாங்கி வெளியேற்றும் திறன் தோலுக்கு உள்ளது என்றும் அவர் கூறினார். நீரிழி நோய்க்கான காலணி இத்தகையை உற்பத்தி பொருளுக்கு உதாரணம் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார். இத்தகையை காலணிகள் பாதங்களில் ஏற்படும் அபரிமிதமான அழுத்தத்தை குறைத்து சிறந்த வாழ்க்கை தரத்தை உறுதி செய்கின்றன என்றும் அவர் கூறினார்.

மனித ஆரோக்கியத்திற்கு பயன்படக்கூடிய இணைப்புத்திசு  எனப்படும் ஜவ்வு அடிப்படையிலான புதுமையான உயிரி பொருட்கள் புதிய வாய்ப்புகளாகும் என்று தெரிவித்த அமைச்சர் இவற்றை தோலுக்கான இணைப் பொருட்களாக பயன்படுத்த முடியும் என்று தெரிவித்தார். இதன் மூலம் அடுத்த தலைமுறை தோல் தொழில்நுட்பங்கள், தோல் அடிப்படையிலான உயிர்ம பொருட்களை  மாசுபடுத்தக் கூடிய சுண்ணாம்பு, சல்பைடு உள்ளிட்ட இதர ரசாயனங்களை தவிர்க்க முடியும் என்று அவர் கூறினார். தோல் தொழில் துறையில், புதிய இந்தியாவுக்கு வருங்காலத்தை உருவாக்குவதற்கு,  மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் அறிவுசார் களமாக உருவெடுக்கும் வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்தார்.

 1947-ம் ஆண்டில் இந்திய தோல் தொழில் துறை சுமார் 50,000 பேருக்கு மட்டும் வாழ்வாதார வாய்ப்புகளை வழங்கியதாக கூறிய டாக்டர் ஜிதேந்திர சிங், இன்று இத்துறை நாட்டில் 45 லட்சம் பேருக்கு மேல் வாழ்வாதாரத்தை அளித்து வருவதாக கூறினார்.  2021-ம் ஆண்டில் தோல் துறையில் ரூ.40,000 கோடி மதிப்புக்கு  ஏற்றுமதி இலக்கு எட்டப்பட்டிருப்பது குறித்து அவர் மனநிறைவை வெளியிட்டார். அகாடமி- ஆராய்ச்சி- தொழில் துறைகளுக்கு இடையே ஒரு தனித்துவமான கூட்டாண்மையை உருவாக்குவதில் சிஎஸ்ஐஆரின் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (சிஎல்ஆர்ஐ) முக்கிய பங்கு வகித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். மேலும் இந்திய தொழில்துறை சமூக சமத்துவத்துக்கு உறுதியான மற்றும்  வெளிப்படையான பங்களிப்பையும் வழங்கியுள்ளது. பெண்களை அதிக அளவுக்கு அதிகாரப்படுத்துவதில் கணிசமான அளவு பங்களிப்பை,  தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் காலணி தொழில் வழங்கியுள்ளது. 1950-ம் ஆண்டு முதல் பெண்களை அதிகாரப்படுத்தும் வகையில், சமூக சமத்துவ பயன்களை தோல் தொழில் வழங்கி வருவது பாராட்டத்தக்கது என அமைச்சர் குறிப்பிட்டார்.

 மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு 1948-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந் தேதி திரு ஷியாமா பிரசாத் முகர்ஜி அடிக்கல் நாட்டியதை சுட்டிக்காட்டிய டாக்டர் ஜிதேந்திர சிங், நாடு சுதந்திரமடைந்த முதலாவது ஆண்டிலேயே  தொடங்கப்பட்டு, நாட்டின் 75-வது சுதந்திர ஆண்டில், தனது பவள விழாவை இந்நிறுவனம் கொண்டாடுவது பொருத்தமாகும் என்று தெரிவித்தார். நாட்டில் உள்ள மிகச்சில தேசிய ஆய்வகங்கள் மட்டுமே இவற்றுடன் ஒத்திசைவான வளர்ச்சியை பெற்றுள்ளது என்று அவர் கூறினார்.

 தமிழ்நாட்டில் தோல் பதனிடும் தொழிலுக்கு மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் உதவி வருவது பாராட்டத்தக்கது என கூறிய அமைச்சர், 1996-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் சுமார் 400 தோல் பதனிடும் தொழிற்சாலைகளை மூட உத்தரவிட்டபோது, புதுமையான சூழலியல் தீர்வுகளை பயன்படுத்தி ஒன்பது மாதங்களுக்குள் அனைத்து 764 பதனிடும் தொழிற்சாலைகளை சிஎல்ஆர்ஐ இயங்கவைத்ததை சுட்டிக்காட்டினார். இது நாட்டின் பொது நிதியுடன் கூடிய ஆராய்ச்சியின் சாதனை என்று குறிப்பிட்ட அவர்,   சிஎல்ஆர்ஐ-ன் பல்வேறு பங்களிப்புகள் இந்தியாவின் தோல் துறையின் வளர்ச்சிக்கு ஒருங்கிணைந்த பகுதியாக உருவாகியுள்ளது என்று கூறினார்.

 1948 முதல் சென்னையில் உள்ள சிஎல்ஆர்ஐ-ன் பரிணாமம் குறித்து குறிப்பிட்ட டாக்டர் ஜிதேந்திர சிங், முதல் 25 ஆண்டுகளில் இந்த நிறுவனம் துறையின் வளர்ச்சிக்கு தேவையான தொழில் நுட்பங்களை, சென்றடையாத இடங்களுக்கு  கொண்டு செல்வதில் கவனம் செலுத்தியது என்றார். அடுத்த 25 ஆண்டுகளில், இந்திய தோல் ஆராய்ச்சி மற்றும் தொழிலை நவீனப்படுத்தியதிலும், சுற்றுச்சூழல் முன்னேற்பாடுகளை அதிகரிப்பதிலும் கவனம் செலுத்தப்படும். கடந்த 25 ஆண்டுகள் உலகச்சந்தையில் தோலின் மதிப்பை அதிகரிப்பதில் ஈடுபட்டது.  அடுத்த 25 ஆண்டுகளில் தோல் ஆராய்ச்சி மற்றும் தொழிலுக்கான புதிய தொலைநோக்கு, உலகச் சந்தையில் புதுமை மற்றும் வணிக முத்திரை கட்டமைப்பின் மூலம் முக்கியமான புதிய சாதனையை படைக்கும்.

-------



(Release ID: 1826720) Visitor Counter : 247


Read this release in: English , Urdu , Hindi , Telugu