அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
அறிஞர்களின் வெளியீடுகள் குறித்த பயிற்சி என்னும் தேசியப் பயிலரங்கின் மூன்றாம் நாள் நிகழ்வு
Posted On:
15 MAY 2022 4:45PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் குழுமத்தின் அறிவியல் தகவல்தொடர்பு மற்றும் கொள்கை ஆய்வு மையத்தின் ஆராய்ச்சி சஞ்சிகைகள் பிரிவு, மே 12-18 வரை ,அறிவார்ந்த வெளியீடுகள் குறித்த செய்முறைப் பயிற்சி” என்ற ஒருவார கால தேசிய பயிலரங்கை நடத்தி வருகின்றது. அறிவியலை துரிதப்படுத்து என்னும் திட்டத்தின் கீழ் இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியத்தின் நிதி உதவியுடன் இந்தப் பயிலரங்கு நடைபெறுகிறது.
பயிலரங்கின் மூன்றாவது நாளான இன்று காரியசாலா இரண்டு அமர்வுகளைக் கொண்டிருந்தது. காலை 10.00-11.00 மணிக்கு நடைபெற்ற ஐந்தாவது அமர்வில், இந்திய அறிவியல் கழகத்தின் புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர் டாக்டர். டி.என். ராவ், “ஆய்வுக் கட்டுரைகளை எழுதும் கலை” என்ற அறிவுப்பூர்வமான விரிவுரையை வழங்கினார்.
சிஎஸ்ஐஆர்-என்ஐஎஸ்சிபிஆர்-ன் மூத்த முதன்மை விஞ்ஞானி டாக்டர் ஜி மகேஷ் தலைமையில் ஆறாவது அமர்வு நடைபெற்றது. இன்றைய இரண்டு அமர்வுகளிலும் மாணவர்கள் அறிஞர்களிடம் கேள்விகளைக் கேட்டு , விளக்கம் பெற்றனர்.
ஆராய்ச்சி இதழ்கள் (உயிரியல் அறிவியல்) பிரிவு தலைமை விஞ்ஞானி & தலைவர்,திரு ஆர்.எஸ்.ஜெயசோமு, மூத்த விஞ்ஞானி டாக்டர் என்.கே.பிரசன்னா ஆகியோர் 3வது நாளின் இரண்டு அமர்வுகளையும் சீராக நடத்தினர்.
*********
(Release ID: 1825582)
Visitor Counter : 166