பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
ஜம்முவில் உள்ள கதுவாவில் பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் பணி முடிக்கப்பட்ட 68 சாலைகளை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ஆய்வு செய்தார்
Posted On:
14 MAY 2022 4:37PM by PIB Chennai
ஜம்முவில் உள்ள கதுவாவில் பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் பணி முடிக்கப்பட்ட 68 சாலைகளை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று ஆய்வு செய்தார்.
ஐக்கிய அரபு அமீரக அதிபர் திரு ஷேக் கலீஃபா பின் சயீத் அல்-நஹ்யானின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இன்று அனுசரிக்கப்படும் அரசு துக்கம் காரணமாக சாலைகளின் திறப்பு விழாவை அவர் ஒத்திவைத்தார்.
547 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட, 526 கிலோமீட்டர் சாலைகளால் ஒரு லட்சத்து 20,000-க்கும் அதிகமான மக்கள் பயனடையக்கூடும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக கடுமையான சவால்கள் இருந்தபோதிலும், சில திட்டங்களைத் தவிர அனைத்து திட்டங்களும் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிக்கப்பட்டன என்று அவர் கூறினார்.
பெருந்தொற்றின் சவால்களுக்கு இடையிலும், வளர்ச்சியின் வேகத்தில் நாடு, குறிப்பாக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், சமரசம் செய்யவில்லை என்று அவர் கூறினார். சாலைகளை வளர்ந்து வரும் நாட்டின் உயிர்நாடி என்று குறிப்பிட்ட அவர், கல்வி, சுகாதாரம், விவசாய விளைபொருட்களை சந்தைப்படுத்துதல் போன்ற பல்வேறு துறைகளில் இவை பலன்களைத் தருவதோடு, பல சமூக நலன்களையும் கொண்டு வரும் என்றார்.
ரூ 29.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 22 பாலங்களின் நிறைவுப் பணிகளையும் அமைச்சர் பார்வையிட்டார், விரைவில் அவை மக்களுக்கு அர்ப்பணிக்கப்படும். பிரதமர் திரு நரேந்திர மோடி அரசின் கடந்த 7-8 ஆண்டுகளில், நாட்டின் பணி கலாச்சாரம் ஒரு பெரிய மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1825361
*********
(Release ID: 1825387)
Visitor Counter : 130