தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
தரப்படுத்துதல், திறன், வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமையை உறுதிசெய்ய தொலைத்தொடர்புத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது
प्रविष्टि तिथि:
10 MAY 2022 5:41PM by PIB Chennai
குறைப்பு சரிபார்த்தல் நடைமுறையை தரப்படுத்துதல், திறன், வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமையை உறுதிசெய்ய வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்பு அமைச்சகத்தின் தொலைத்தொடர்புத்துறை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த உரிமகட்டணம், அலைக்கற்றை பயன்பாடு, மதிப்பீட்டு நடைமுறை கட்டணம் ஆகியவற்றை நிர்ணயிக்க வசதியாக இருக்கும். தொலைத்தொடர்புத்துறையின் கள அலுவலகங்கள் 2006-07 முதல், வழிகாட்டு நெறிமுறைகளுக்கு ஏற்ப சரிபார்த்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
திறன் மற்றும் கழிவு கேட்புகளை உரிய நேரத்திற்குள் மேற்கொள்வது, சரிபார்த்தல் அதிகாரிகளின் நிலைத்தன்மை மற்றும் சீரான நிலையை பராமரித்தல், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமை உள்ளிட்டவை இந்த வழிகாட்டு நெறிமுறைகளின் நோக்கமாகும்.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1824198
***************
(रिलीज़ आईडी: 1824225)
आगंतुक पटल : 248