விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய வேளாண் அமைச்சர் இஸ்ரேலில் வேளாண் நிறுவனங்களைப் பார்வையிட்டார்

प्रविष्टि तिथि: 09 MAY 2022 6:28PM by PIB Chennai

மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர், தலைமையிலான தூதுக்குழுவினர் இஸ்ரேலை தலைமையிடமாகக் கொண்ட வேளாண் நிறுவனங்களை 2022 மே 9 அன்று பார்வையிட்டனர். வேளாண் வளர்ச்சித் துறைகளில், தொடர்புடையவர்களுடன் பல்வேறு விஷயங்களை அமைச்சர் விவாதித்தார்.

இந்த பயணத்தின் போது, இந்த நிறுவனங்களின் வல்லுநர்கள், துறை சார்ந்த தரவு நிபுணர்கள் ஆகியோருடன் நவீன வேளாண் நடைமுறைகள் தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து துதுக்குழுவினர் கலந்துரையாடினர்.

நாற்றுப்பண்ணை நடைமுறைகள், பழமரக்கன்றுகள் நடுதல், திராட்சைத் தோட்டங்கள் அமைத்தல் அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பங்கள், செடி கொடிகள் வளர்த்தல், நுண்ணீர் பாசன முறை, நவீன பால்வளம், கோழி வளர்ப்பு உள்ளிட்ட விஷயங்கள் இந்த விவாதத்தில் முக்கிய இடம் பெற்றன.

-----­


(रिलीज़ आईडी: 1823964) आगंतुक पटल : 235
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी