பாதுகாப்பு அமைச்சகம்

சவூதி அரேபியாவின் ஜெட்டாவிற்கு முதல் பயிற்சி படை கப்பல்கள் வருகை

Posted On: 08 MAY 2022 2:53PM by PIB Chennai

முதல் பயிற்சிப் படையின் கப்பல்கள் ,ஐந்து நாடுகளின் வெளிநாட்டுப் பணியமர்த்தலின் ஒரு பகுதியாக சவூதி அரேபியாவின் ஜெட்டாவிற்கு விஜயம் செய்துள்ளன. இந்த முதல் பயிற்சிப்படையின் மூத்த அதிகாரி கேப்டன் அஃப்தாப் அஹ்மத் கான்,  கப்பல்களின் கட்டளை அதிகாரிகளுடன், ராயல் சவுதி கடற்படையின் மேற்கு கடற்படைத் தளபதியான ரியர் அட்மிரல் யாஹ்யா பின் முகமது அல்-அசிரியை சந்தித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு கடற்படை ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி முயற்சிகள் குறித்து இந்தச் சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது. இந்த பயணத்தின் போது, கப்பல்களின் அதிகாரிகள் மற்றும் சவுதி அரேபியாவின் ராயல் நேவி அதிகாரிகள் கலந்துரையாடல் நடத்துவதுடன்,  பயிற்சி பரிமாற்றத்திலும் ஈடுபடுவார்கள்.

*********(Release ID: 1823648) Visitor Counter : 184


Read this release in: Hindi , English , Urdu