சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
சிறப்பு மின்தேக்கி சாதனத்திற்கு கார்பன் இறக்குமதிக்கு மாற்றான நடைமுறையை சிஎஸ்ஐஆர்-சிஈசிஆர்ஐ உருவாக்கம்
Posted On:
07 MAY 2022 11:40AM by PIB Chennai
1) சிறப்பு மின்தேக்கியின் கட்டமைப்பிற்கு மதிப்பு கூட்டப்பட்ட உயர் மேற்பரப்பளவு கார்பன், 2) 2.7 வோல்ட், 100 ஃபராத் உருளை சிறப்பு மின்தேக்கிகளை உருவாக்குவதற்கான செயல்முறை ஆகிய செய்முறை நுண்ணறிவை பரிமாறிக் கொள்வதற்கான புதிய கூட்டுமுயற்சி காரைக்குடியில் உள்ள மத்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக்கான குழுமம்- மத்திய மின் வேதியியல் ஆய்வு நிறுவனத்திற்கும் (சிஎஸ்ஐஆர்-சிஈசிஆர்ஐ), சென்னையைச் சேர்ந்த கியூமேக்ஸ் அயான் தனியார் நிறுவனத்துக்கும் இடையே ஏற்பட்டுள்ளது.
தரமணியில் உள்ள சிஎஸ்ஐஆர்-சிஈசிஆர்ஐ சென்னை மையத்தில் நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி. கே. சரஸ்வத் முன்னிலையில் இந்த முக்கிய நிகழ்ச்சி நடைபெற்றது. இறக்குமதிகளைக் குறைக்கும் வகையில் சிறப்பு மின்தேக்கி துறையில் இந்தியாவை அடிப்படையாகக் கொண்ட விநியோக சங்கிலியை வலுப்படுத்துவது தான் இதன் இறுதி இலக்காக இருக்க வேண்டும் என்று டாக்டர் வி.கே. சரஸ்வத் வலியுறுத்தினார்.
சிஎஸ்ஐஆர்-சிஈசிஆர்ஐ நிறுவனத்தின் விஞ்ஞானியான டாக்டர் எம் சதீஷ் உருவாக்கிய சிறப்பு மின்தேக்கி பொருள் மற்றும் சாதனம் தயாரிப்பது பற்றிய செய்முறை நுண்ணறிவு, கியூமாக்ஸ் அயான் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டது. சிறப்பு மின்தேக்கிகளுக்கு, கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் (CAGR) 30% என்ற அளவிலான தேவை அதிகரித்து வருவதால் இந்தத் தொழில்நுட்பம் புதிய உச்சத்தை அடையும் என்று சிஎஸ்ஐஆர்-சிஈசிஆர்ஐ நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் என். கலைச்செல்வி நம்பிக்கை தெரிவித்தார்.
செய்முறை நுண்ணறிவைப் பெற்றுக்கொண்ட கியூமாக்ஸ் அயான் தனியார் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் திரு சபாபதி, கேந்திர மற்றும் உள்நாட்டு சந்தைகளின் தேவையை நிறைவேற்றுவதற்கு இந்த சிறப்பு மின்தேக்கி தொழில்நுட்பத்தை அமல்படுத்தும் தமது வலுவான உறுதித்தன்மையை எடுத்துரைத்தார்.
*************

(Release ID: 1823459)