பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாதுகாப்பு தேவைகளுக்காக இந்திய விமானப்படை விண்வெளிப்படையாகவும் மாறும்: பாதுகாப்புத் துறை அமைச்சர்

Posted On: 05 MAY 2022 6:22PM by PIB Chennai

நாட்டின் பாதுகாப்பிற்காக எதிர்கால சவால்களை சமாளிக்கும் வகையில் இந்திய விமானப் படையை இந்திய விண்வெளிப் படையாகவும் மாற்ற தயாராக உள்ளதாக பாதுகாப்பு துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் 37-வது மார்ஷல் பி. சி. லால் நினைவு விழாவில் இன்று பேசினார். இந்த விழாவில் விமானப்படை தளபதி வி. ஆர். சவுத்ரி கலந்து கொண்டார்.

 வான்வழித் தாக்குதல்களை சமாளிக்கும் வகையில் தொழில்நுட்பங்கள், நிபுணத்துவம் மற்றும் மனித வளங்களின் தேவையை அவர் எடுத்துரைத்தார். நமது எதிரிகளால் நாம் விண்வெளியை ராணுவ நடவடிக்கைகாக பயன்படுத்தக் கூடும். எனவே வளர்ந்து வரும் பாதுகாப்பு சவால்களை அடையாளம் கண்டு நாம் தயாராக இருக்கவேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

  சிரியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் நிலைமையை உன்னிப்பாக கவனிப்பதன் மூலம் எதிர்கால போர்களின் நிலைமையை கணக்கிடலாம் எனவும், ஆயுதப் படைகளுக்கு குறிப்பாக விமானப்படை வீரர்களுக்கு திறன் பயிற்சிகள் வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

1965 மற்றும் 1971 போர்களில் ஏர் சீப் மார்ஷல் பி. சி. லால் சிறப்பாக பணியாற்றியதை  அமைச்சர் நினைவுகூர்ந்தார்.

 ஒருங்கிணைப்புச் செயல்பாட்டின் மூலம் நமது ஆயுதப்படை சக்திகளை ஒன்றிணைப்பதற்கும், கூட்டுநோக்கம், பயிற்சி, திட்டமிடல் உள்ளிட்ட செயல்பாடுகளை நிறைவேற்றுவதன் மூலம் படைகளுக்கிடையே கூடுதல் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த முடியும் என்று குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில், '1971-ம் ஆண்டின் இந்திய-பாகிஸ்தான் போர்: விமானப்படை வீரர்களின் நினைவுகள்' என்ற புத்தகத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் வெளியிட்டார்.

***************


(Release ID: 1823054) Visitor Counter : 239


Read this release in: English , Urdu , Hindi