மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளராக திரு அல்கேஷ் குமார் ஷர்மா பொறுப்பேற்பு

Posted On: 05 MAY 2022 1:13PM by PIB Chennai

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளராக திரு அல்கேஷ் குமார் ஷர்மா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.  இவர் கேரளாவைச் சேர்ந்த 1990 பிரிவின் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாவார்.

இதற்கு முன்னர், இந்திய அரசின் அமைச்சரவை செயலகத்தில் கூடுதல் செயலாளராகவும், செயலாளராகவும் திரு அல்கேஷ் குமார் ஷர்மா பணியாற்றியுள்ளார். தமது பொறுப்புகளுடன், உள்கட்டமைப்பு, பொருளாதாரம், நிதி, தொழில்துறை, வேளாண்மை மற்றும் மத்திய அரசின் இதர அமைச்சகங்களின் அனைத்து அமைச்சரவை முன்மொழிவுகளையும் அவர்  கவனித்து வந்தார்.

அக்டோபர் 2015 முதல் செப்டம்பர் 2019 வரை தேசிய தொழில் வழித்தட மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மேலாண் இயக்குநராகவும், தேசிய தொழில் வழித்தட மேம்பாடு மற்றும் நடைமுறை அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் இணைச் செயலாளராகவும் (2012 முதல் 2015 வரை) அவர் பணியாற்றியுள்ளார்.

இது தவிர, 2006 முதல் 2009 வரை, நகர்ப்புற மேம்பாடு மற்றும் வறுமை ஒழிப்பின் தேசிய திட்ட இயக்குநராக ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தில் திரு ஷர்மா பணியாற்றினார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1822891

 

***************

(Release ID: 1822891)(Release ID: 1822931) Visitor Counter : 65