இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகள் 2021க்கு பின் ஹரியானாவின் மல்யுத்த வீரர் ஆஷிஷ் காமன்வெல்த் போட்டியின் வெற்றிக்கு குறிவைத்துள்ளார்
Posted On:
02 MAY 2022 5:10PM by PIB Chennai
ஆஷிஷூக்கு பத்து வயது ஆகியிருந்த போது அவரது தந்தை மல்யுத்தப் போட்டியில் அவரை புகுத்தினார். அந்த நேரத்தில் விளையாட்டைப் பற்றி ஆஷிஷூக்கு எந்த சிந்தனையும் இல்லை. அதற்கு முன் பார்த்ததுமில்லை. ஆனால், ஹரியானாவின் சோனேபட் மாவட்டத்தின் ஜோஷி ஜாட் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான அவரது தந்தை, பக்கத்து கிராமங்களில் மல்யுத்தத்தை பார்த்திருந்தார். இது கடுமையானதாகவும், தனிநபர் விளையாட்டாகவும் இருப்பதால், தமது மகனின் வாழ்க்கையில் ஒழுக்கத்தைக் கொண்டுவரும் என்று அவர் நம்பினார்.
தொடக்கத்தில் விளையாட்டை விரும்பாத ஆஷிஷ், 2017-ல் 97 கிலோ எடை பிரிவில், தேசிய சப் ஜூனியர் போட்டிகளில் முதலாவது பதக்கத்தைப் பெற்ற போது, மல்யுத்தப் போட்டியில் ஆர்வம் கொண்டார்.
இதே எடை பிரிவில், தேசிய ஜூனியர் போட்டிகளில், மேலும் மூன்று பதக்கங்களை அவர் வென்றார். 2021-ல் நொய்டாவில் நடைபெற்ற தேசிய சீனியர் 97 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
பின்னர், கர்நாடகாவின் பெங்களூருவில் நடைபெறும் அகில இந்திய பல்கலைக்கழக விளையாட்டுக்கள் மற்றும் கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள் 2021-ல் 97 கிலோ எடைப்பிரிவில், ஞாயிறன்று (01.05.2022) தங்கப்பதக்கம் வென்றார்.
கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுகளில், எனது முதலாவது தங்கப்பதக்கம் இதுவாகும். தற்போது எனது கவனம் முழுவதும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் உள்ளது.
2024-ல் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், தாம் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள், வரவிருக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், ஆகியவற்றிலேயே தமது முழு கவனம் இருப்பதாக தங்கப்பதக்கம் வென்ற குருஷேத்ரா பல்கலைக்கழகத்தின் ஆஷிஷ் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1822029
***************
(Release ID: 1822069)
Visitor Counter : 155