மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் செமி கண்டக்டர் சூழலை ஊக்குவிப்பதன் முக்கிய பகுதியாக, வடிவமைப்பு மற்றும் இணை மேம்பாட்டு ஒப்பந்தங்கள் செமிகான் இந்தியா 2022-ல் அறிவிப்பு

Posted On: 01 MAY 2022 4:36PM by PIB Chennai

இந்தியாவை செமிகண்டக்டர் மையமாக மாற்றும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கை நனவாக்கும் வகையில், செமிகான் இந்தியா 2022 மாநாட்டின் கடைசி நாளில் பல்வேறு ஒப்பந்தங்கள்/உடன்படிக்கைகள் கையெழுத்தானது அறிவிக்கப்பட்டது. மூன்று நாள் செமிகான் இந்தியா 2022 மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி ஏப்ரல் 29-ந்தேதி துவக்கிவைத்தார்.

செமிகான் இந்தியா பற்றி பேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர், ஸ்டார்ட் அப்கள், தொழில்துறை, அரசு ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்பு, கூட்டாண்மை ஆகியவற்றின் அடிப்படையில் மூன்று நாள் மாநாட்டில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து மனநிறைவை வெளியிட்டார்.

இந்தியாவின் லட்சியங்கள் மிகத்தெளிவாக உள்ளதாக தெரிவித்த அவர், செமிகண்டக்டர் துறையில் வாய்ப்புகளின் பூமியாகவும், எதிர்காலமாகவும்  இந்தியா உள்ளது என்பதால், எதிர்காலத்திற்கான சூழலை உருவாக்குவதாக தெரிவித்தார்.

நமது செமிகான் கொள்கையின் பயனாளிகள், தற்போதைய, எதிர்கால ஸ்டார்ட் அப்கள் ஆகியோர் இந்தியாவின் திறமையான மனித மூலதனமாக இருப்பார்கள் என்று அமைச்சர் குறிப்பிட்டார். வாய்ப்புகளைப் பயன்படுத்துவதற்கான அதிகாரத்தை அவர்களுக்கு வழங்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என அவர் கூறினார்.

கடந்த காலத்தில் உலகம் இண்டலின் உள்பக்கத்தைக் கேட்டது என்று கூறிய திரு ராஜீவ் சந்திரசேகர், எதிர்காலத்தில் அது டிஜிட்டல்இந்தியா உள்பக்கத்தைக் கேட்கும் என்றார்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1821809

***************


(Release ID: 1821831) Visitor Counter : 315


Read this release in: English , Urdu , Hindi , Kannada