வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம் அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் குறைந்த விலையில் க்ளூட்டன் இல்லாத தினையை அறிமுகம் செய்துள்ளது
ஆஹார் உணவு திருவிழாவில் 12 மாநிலங்களை சேர்ந்த 33 புவிசார் குறியீடு பெற்ற உணவுப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன
Posted On:
30 APR 2022 7:33PM by PIB Chennai
வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம் (அபேடா) சார்பில் தினை பொருட்களுக்கு உலகளாவிய சந்தை கிடைக்கப்பெறும் வகையில், புதுடில்லி பிரகதி மைதானத்தில் நடந்து வரும் ஆஹார் உணவு திருவிழாவில், அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் ரூபாய் 5 முதல் 15 ரூபாய் வரை என குறைந்த விலையில் தினை உணவுப் பொருட்களை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
க்ரீம் பிஸ்கட், உப்பு பிஸ்கட், பால் பிஸ்கட், ராகி பீநட் பட்டர், எளிதில் தயாராகக் கூடிய நூடுல்ஸ், பொங்கல், பிரியாணி, கிச்சடி, உப்புமா ஆகிய தினை உணவுப்பொருட்கள் இந்த உணவுத் திருவிழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த பொருட்கள் 100% குளூட்டன் இல்லாதது மற்றும் இயற்கையானது. இவற்றை 12 மாதங்கள் வரை பாதுகாத்து பயன்படுத்த முடியும்.
இதோடு அபெடா அரங்கில் கர்நாடகா துவரம் பருப்பு, கேரளா மட்டை அரிசி உள்ளிட்ட 12 மாநிலங்களை சேர்ந்த 33 புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், வேளாண் மற்றும் உணவு புவிசார் குறியீடு பொருட்கள் மற்றும் புவிசார் குறியீடு பெற்ற இந்திய மாங்காய்கள் குறித்த இரண்டு புத்தகங்கள் வெளியிடப்பட்டன.
இது குறித்து பேசிய அபெடா தலைவர் திரு அங்கமுத்து, அபெடா வின் தொலைநோக்கு அணுகுமுறை, தீவிரமான மற்றும் நிலையான முயற்சிகள் இந்தியா தன்னை ஒரு நிலையான மற்றும் தரமான வேளாண் பொருட்களை வழங்குபவராக நிலைநிறுத்திக் கொள்ள உதவியது என்று கூறினார்.
பல்வேறு முயற்சிகளின் காரணமாக இந்தியாவின் தினை உற்பத்தி 2020 -21 ஆம் ஆண்டில் 17.96 மில்லியன் அளவாகவும், 10.86 மில்லியன் அளவாகவும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1821647
***********
(Release ID: 1821764)