அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் திரு அஜய் குமார் சூத் சந்தித்தார்

Posted On: 27 APR 2022 3:58PM by PIB Chennai

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் (தனிபொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங்கை, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நாட்டின் முன்னணி விஞ்ஞானியும், கல்வியாளருமான மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் திரு அஜய் குமார் சூத் இன்று சந்தித்தார்.

போதிய அளவு நிதி வழங்குதல் மற்றும் தொழில்நுட்ப தலையீடுகள் மூலம் புதிய தொழில்களை நீடிக்க செய்வதற்கான திறனை கண்டறியும் நகல் கொள்கையை உருவாக்குமாறு இந்த சந்திப்பின் போது அறிவியல் ஆலோசகரை டாக்டர் ஜிதேந்திர சிங் கேட்டுக்கொண்டார்.

2030-க்குள் தரமான ஆராய்ச்சி விளைவுகள், அறிவியலின் பெண்களின் 30 சதவீத பங்கேற்பு இலக்கு, அறிவியல், தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்பில் உலகளாவிய தலைவர்களில் முதல் மூன்று இடத்தில் இந்தியாவை கொண்டு செல்வது தொழில்நுட்பத்தில் தற்சார்பு இந்தியாவை உருவாக்குவது ஆகியவற்றில் நிலையான சிந்தனையின் அவசியத்தை அமைச்சர் வலியுறுத்தினார்.

38 இணைப்புகள் கொண்ட அமைச்சகங்களிடமிருந்து பெறப்பட்ட 200க்கும் அதிகமான பிரச்சனைகளுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தீர்வுகள் அமலாக்கத்திற்கு முன்னுரிமை அளிப்பதை கண்காணிக்குமாறும் முதன்மை அறிவியல் ஆலோசகரை டாக்டர் ஜிதேந்திர சிங் கேட்டுக்கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1820496

***************


(Release ID: 1820542) Visitor Counter : 109


Read this release in: English , Urdu , Hindi