சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப் பெருவிழாவின் ஒருபகுதியாக “புதுவகை வேளாண்மை” குறித்த தேசிய பயிலரங்கை நித்தி ஆயோக் ஏப்ரல் 25 அன்று புதுதில்லி விஞ்ஞான் பவனில் ஏற்பாடு செய்திருந்தது.
இந்த பயிலரங்கில் உரையாற்றிய நித்தி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி திரு அமிதாப் காந்த், இயற்கை வேளாண்மை காலத்தின் தேவை என்றார். எனவே இதற்கு அறிவியல் பூர்வமான வழிகளை அடையாளம் காண்பது அவசியம் என்றும் அவர் கூறினார். இதன் மூலம் விவசாயிகளுக்கு நேரடி பயன்களையும், அதிக வருவாயையும் உறுதி செய்ய முடியும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா, சத்தான உணவு கிடைப்பதில் இயற்கை வேளாண்மையின் பங்கு குறித்து எடுத்துரைத்தார். சிறந்த சத்துணவை உறுதி செய்வதில் கால்நடைகளின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் பேசுகையில், இயற்கையுடன் இணக்கம், உற்பத்திச் செலவு குறைத்தல், நல்லதரமான பொருட்களையும் விவசாயிகளுக்கு லாபத்தையும் உறுதி செய்தல் ஆகியவற்றில் பணி செய்வதன் மூலம் வேளாண் நடைமுறைகளை அரசு ஊக்கப்படுத்துகிறது என்றார். இயற்கை வேளாண்மை ஊட்டச்சத்துள்ள உணவை அளிக்கிறது என்றும் அவர் கூறினார்.
இந்த பயிலரங்கில் நேரடியாகவும், இணையம் வழியாகவும் 1250-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1820138
***************