வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
36-வது ஆஹார்-2022-ன் நிகழ்வை ஏப்ரல் 26-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை பிரகதி மைதானத்தில் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் இணைந்து நடத்த உள்ளது.
प्रविष्टि तिथि:
25 APR 2022 5:58PM by PIB Chennai
உணவு மற்றும் விருந்தோம்பல் துறையில் ஏராளமான வாய்ப்புகளை வழங்கும் நோக்கில், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்புடன் இணைந்து ஏப்ரல் 26, 2022 முதல் பிரகதி மைதானத்தில் ஆசியாவின் மிகப்பெரிய சர்வதேச உணவு மற்றும் விருந்தோம்பல் கண்காட்சி ஆஹார்-ஐ நடத்துகிறது.
மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடியின் 'உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஆதரவு அளிப்போம்' மற்றும் 'சுயசார்பு இந்தியா' என்பதை கருத்தில் கொண்டு, வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் ஆஹாரின் 36-வது நிகழ்வில் "புவியியல் குறியீடு தயாரிப்புகள்" என்ற கருப்பொருளுடன் ஏற்பாடு செய்துள்ளது. புவியியல் குறியீடு சான்றிதழ் பெற்ற விவசாயப் பொருட்களின் ஏற்றுமதியை மேம்படுத்துவதில் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் கவனம் செலுத்துகிறது.
ஆஹார் என்பது, வர்த்தகம் மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் கீழ் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதி ஊக்குவிப்பு முயற்சிகளின் ஒரு பகுதியாகும். இது உணவு மற்றும் பானங்கள் துறையில் உலகளாவிய அளவில் விவசாய மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களைக் காட்சிப்படுத்தபடுவதை காண உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து பெருமளவிலான இறக்குமதியாளர்கள் மற்றும் மக்கள் வருகை தருகின்றனர்.
ஆஹார் தவிர, வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் விவசாய ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் ஆர்கானிக் வேர்ல்ட் காங்கிரஸ், பயோஃபேச் இந்தியா போன்ற தேசிய நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்கிறது.
குறிப்பிடத்தக்க வகையில், 150 க்கும் மேற்பட்ட உணவு மற்றும் வேளாண் பொருட்கள் புவிசார் குறியீட்டுடன் புவியியல் குறியீட்டு பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில், 123 புவிசார் குறியீடுகள் கொண்ட தயாரிப்புகள் கடந்த மார்ச் மாதம் வரை வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தால் வகை படுத்தப்பட்டுள்ளன.
வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் ஆஹாரில் உள்ள அறை எண் 3, தரை தளத்தில் 3,000 சதுர மீட்டர் பரப்பளவில் ஒரு கருப்பொருள் அரங்கத்தை அமைத்துள்ளது. அங்கு, புவிசார் குறியீடுகளின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்களுக்கு அவர்களின் தயாரிப்புகளை காட்சிப்படுத்த வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
80-க்கும் மேற்பட்ட ஏற்றுமதியாளர்கள் விவசாயப் பொருட்களின் பல்வேறு பிரிவுகளை உருவாக்குகின்றனர். இதில் புவிசார் குறியீட்டுடன் கூடிய தயாரிப்புகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஆர்கானிக், உறைந்த உணவுப் பொருட்கள், தினைகள் போன்றவை வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் அரங்கின் கீழ் பங்கேற்கின்றன.
கண்காட்சியில், உண்ணதயார் நிலையில் உள்ள உணவுகள், பரிமாற தயார் நிலையில் உள்ள உணவுகள், நுகர்வோர் வாங்கிச் செல்ல தயார் நிலையில் உள்ள உணவுகள், தாவர அடிப்படையிலான இறைச்சி பொருட்கள், நீரிழப்பு பொருட்கள், சாக்லேட், தானியங்கள், உறைந்த உணவுகள், மூலிகை பொருட்கள், பழச்சாறுகள், தேன். , பால் பொருட்கள் போன்றவை இந்திய உற்பத்தியாளர்களால் இறக்குமதியாளர்களுக்காக காட்சிப்படுத்தப்படும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1819898
***************
(रिलीज़ आईडी: 1819940)
आगंतुक पटल : 357