அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

சர்வதேச விஞ்ஞானிகளுடன் இணைந்து இந்திய விஞ்ஞானிகள் புதிதாகக் கண்டுபிடித்துள்ள நட்சத்திரம்

Posted On: 25 APR 2022 3:57PM by PIB Chennai

இளம் நட்சத்திரங்களின் மிகவும் அரிதான குழுவைச் சேர்ந்த புதிய உறுப்பினரை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். விண்மீன்களின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சி குறித்து இன்னும் விரிவாக ஆராய இது உதவும்.

சர்வதேச விஞ்ஞானிகள் குழுவின் ஒரு பகுதியான இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள தன்னாட்சி நிறுவனமான ஆர்யபட்டா ஆய்வு அறிவியல் கழகத்தின் இந்திய வானியலாளர்கள் இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர்.

டாடா அடிப்படை ஆய்வு நிறுவனம், இந்திய வான் இயற்பியல் நிறுவனம் ஆகியவற்றின் குழுக்களும் இதில் அடக்கம். இவர்கள் அனைவரும் இணைந்து, கயா 20ஈஏஈ (Gaia 20eae) எனும் நட்சத்திரத்தை கண்டுபிடித்துள்ளனர்.

‘தி ஆஸ்ட்ரோபிசிக் ஜர்னல்’ எனும் வான் இயற்பியல் தொடர்பான சஞ்சிகையில் இந்த ஆராய்ச்சி குறித்து வெளியிடப்பட்டுள்ளது.

வெளியீட்டு இணைப்பு: https://doi.org/10.3847/1538-4357/ac41c2

கூடுதல் தகவல்களுக்கு arpan[at]aries[dot]res[dot]in, 19aghosh91[at]gmail[dot]com ஆகிய மின்னஞ்சல் முகவரிகளிலோ அல்லது 7706999192 எனும் கைபேசி எண்ணிலோ அணுகவும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1819839

***************


(Release ID: 1819868) Visitor Counter : 258


Read this release in: English , Hindi , Bengali