புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றுள்ள இந்தியாவின் எரிசக்தி மாற்ற முன்முயற்சி குறித்து திரு ஆர் கே சிங் பெருமிதம்

Posted On: 24 APR 2022 6:22PM by PIB Chennai

மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சரும் சர்வதேச சூரியசக்தி கூட்டணி சபையின் தலைவருமான திரு ஆர் கே சிங், மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் மேன்மைமிகு உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோர் இன்று குருகிராமில் உள்ள சர்வதேச சூரியசக்தி கூட்டணி  செயலகத்திற்கு வருகை தந்து  சூரிய ஆற்றல் மேம்பாடு குறித்து தொழில்துறையினருடன் உரையாற்றினார்.

இந்தியாவின் எரிசக்தி மாற்ற முன்முயற்சிகள் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளதை திரு ஆர் கே சிங் குறிப்பிட்டார். அனைத்து நாடுகளும் முன்வந்து சிக்கல்களைத் தீர்ப்பதற்கு ஒருவருக்கு மற்றொருவர் உதவுவதற்கான நேரம் இது என்று அவர் கூறினார்.

சிறப்புரையாற்றிய ஐரோப்பிய ஆணைய தலைவர், "பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போரில் இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து பணியாற்றி வருகின்றன," என்று கூறினார். கரியமில உமிழ்வு இல்லை என்ற இலக்கை எட்டுவதற்காக இந்தியாவும் ஐரோப்பிய யூனியனும் பாடுபட்டு வருவதாக அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், வளர்ந்து வரும் சூரிய சக்தித் துறையின் மேம்பாட்டுக்காக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று கூறினார் சூரிய சக்தி துறைக்கு எவ்வாறு நிதியளித்து ஊக்குவிப்பது என்பது குறித்து நாம் ஒருவரிடமிருந்து மற்றவர் கற்றுக்கொண்டு சர்வதேச விநியோக சங்கிலிகளை பாதுகாக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் செயலாளர் திரு இந்து சேகர் சதுர்வேதி, பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போரில் சர்வதேச சூரியசக்தி கூட்டணியின் மீதான சர்வதேச சமுதாயத்தின் நம்பிக்கை அதிகரித்து வருவதாக கூறினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1819589

*******



(Release ID: 1819622) Visitor Counter : 209


Read this release in: English , Urdu , Hindi