ரெயில்வே அமைச்சகம்
2021-22-ம் ஆண்டில் 111 மில்லியன் டன் நிலக்கரியை ரயில்கள் மூலம் அதிகமாக அனுப்பி இந்திய ரயில்வே சாதனை
மின்துறைக்கு நிலக்கரி அனுப்புவதற்கு முன்னுரிமை அடிப்படையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன
Posted On:
23 APR 2022 4:46PM by PIB Chennai
அனைத்து மின் நிலையங்களுக்கும் நிலக்கரியை விநியோகிப்பதில் இந்திய ரயில்வே முக்கிய இடம் பிடித்துள்ளது. 2021-22-ம் ஆண்டிலும், நடப்பு ஏப்ரல் மாதத்திலும் மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி கொண்டு செல்ல போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
2021-22-ம் ஆண்டில் 111 மில்லியன் டன் நிலக்கரியை ரயில்கள் மூலம் அதிகமாக அனுப்பி இந்திய ரயில்வே சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டு 542 மில்லியன் டன் நிலக்கரி ஏற்றிச் செல்லப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 653 மில்லியன் டன் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 20.4% அதிகம் ஆகும்.
2021 செப்டம்பர் முதல் 2022 மார்ச் வரை, இரண்டு காலாண்டுகளில் 32% நிலக்கரி மின்நிலையங்களுக்கு அதிகமாக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரியை எடுத்துச் செல்ல ரயில்வே முன்னுரிமை அளித்து வருகிறது. மின்நிலையங்களுக்கு நிலக்கரி விநியோகம் பராமரிக்கப்பட்டு வருகிறது.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும். https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1819315
-----
(Release ID: 1819374)
Visitor Counter : 181