எஃகுத்துறை அமைச்சகம்
என்எம்டிசி-க்கு மக்கள் தொடர்பு விருது 2022
प्रविष्टि तिथि:
23 APR 2022 5:57PM by PIB Chennai
தேசிய கனிமவள கழகம் என்எம்டிசி, இந்திய மக்கள் தொடர்பு சொசைட்டி வழங்கும் 2022-ம் ஆண்டுக்கான மக்கள் தொடர்பு விருதை தட்டிச்சென்றுள்ளது. நான்கு பிரிவுகளில் இது முதலிடத்தைப் பிடித்துள்ளது.
தெலங்கானா மாநிலத்தின் மதுவிலக்கு , விளையாட்டு மற்றும் இளைஞர் நலன், சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் திரு வி சீனிவாஸ் கவுடு இந்த விருதை வழங்கினார். என்எம்டிசி-யின் திரு பிரவீண் குமார் , திரு ஶ்ரீனிவாச ராவ் ஆகியோர் இதனைப் பொற்றுக்கொண்டனர்.
பெருநிறுவன வலைதளம், சிறப்பான ஆண்டு அறிக்கை, நியூஸ் லெட்டர் வடிவமைப்பு, சிஎஸ்ஆர் கார்பரேட் வீடியோ ஆகியவற்றுக்காக தேசிய கனிமவள கழகம் இந்த விருதைப் பெற்றுள்ளது.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1819343
----
(रिलीज़ आईडी: 1819369)
आगंतुक पटल : 175