சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

பல்வேறு பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் டாக்டர் அம்பேத்கர் ஆய்வு இருக்கைகள்

Posted On: 21 APR 2022 4:36PM by PIB Chennai

பல்வேறு பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் டாக்டர் அம்பேத்கர் ஆய்வு இருக்கைகளை உருவாக்கும் திட்டம் பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கரின் தற்கால பொருத்தப்பாட்டிற்கு சரியான புகழஞ்சலியாக இருக்கும்.

இந்த இருக்கைகள் முதன்மையான பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் கற்றலுக்கான நவீன மையங்களை உருவாக்குவது. இதன் மூலம் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் சிந்தனைகள் மற்றும் கொள்கைகளை ஆய்வு செய்வது,

பொருளாதாரம், அரசியல் அறிவியல், சமயம் சார்ந்த ஆய்வுகள், தத்துவம், அரசியல் சட்ட ஆய்வுகள், கல்வி, மானுடவியல், சமூகவியல், சமூகப்பணி, சட்டம், மனித உரிமைகள் உள்ளிட்ட துறைகளில் ஆய்வு செய்தல்,

டாக்டர் அம்பேத்கரின் நீதி மற்றும் அதிகாரமளித்தலுக்கான சிந்தனைகளை மொழியாக்கம் செய்வதற்கு மாதிரி நடைமுறைகளை முறையாக உருவாக்குதல்,

டாக்டர் அம்பேத்கரின் படைப்புகள் மற்றும் தத்துவம் தொடர்பான விஷயங்கள் மட்டுமின்றி சமூக பொருளாதாரம், கலாச்சாரம், ஷெட்யூல்டு வகுப்பு, ஷெட்யூல்டு பழங்குடியினர், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் நலிவடைந்தோர் சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆகியோரின் உயிரியல் அம்சங்கள் பற்றிய ஆய்வுகளையும் மேற்கொள்வது இந்த இருக்கைகளின் நோக்கமாக இருக்கும்.

இந்த இருக்கைகளுக்கு பேராசிரியர், உதவி பேராசிரியர் ஆகியோர் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களின் சட்ட விதிகள் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு வழிகாட்டுதலின்படி நியமிக்கப்படுவார்கள். இதற்கு சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட வேண்டும்.

டாக்டர் அம்பேத்கர் இருக்கைகளுக்கான மானிய உதவித் தொகை தற்போதுள்ள ரூ.35 லட்சம் என்பதிலிருந்து ரூ.75 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த இருக்கைகளை உருவாக்குவதற்கு ஒரு முறை மானியமாக ஒவ்வொரு இருக்கைக்கும் ரூ.10லட்சம் விடுவிக்கப்படும். இந்த தொகை அறைகளின் பயன்பாட்டு கலன்கள், குளிர்சாதன பெட்டி, புத்தகம் வைக்கும் அடுக்குகள், கணினிகள், ஒலிபெருக்கிகள், புத்தகங்கள், இணையதளம் தொடங்குதல் போன்றவற்றுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

 

***************



(Release ID: 1818788) Visitor Counter : 206


Read this release in: English , Urdu