வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் வளர்ச்சிக்கு அச்சாக இருப்பது ஏற்றுமதி என்பதை திரு பியூஷ் கோயல் வலியுறுத்தினார்; 2030-க்குள் வணிகம் மற்றும் சேவைகள் ஏற்றுமதி தலா 1 டிரில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் திறனை இந்தியா கொண்டிருக்கிறது என்று அவர் கூறினார்

Posted On: 20 APR 2022 7:11PM by PIB Chennai

2030-க்குள் வணிகம் மற்றும் சேவைகள் ஏற்றுமதி தலா 1 டிரில்லியன் அமெரிக்க டாலரை  எட்டும் திறனை இந்தியா கொண்டிருக்கிறது என்று மத்திய தொழில், வர்த்தகம், நுகர்வோர் நலன், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளிகள் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறியுள்ளார்.  புதுதில்லியில் இன்று 21-ஆவது குடிமைப் பணிகள் தினம் 2022 –ஐ ஒட்டி நடைபெற்ற சுயசார்பு இந்தியா- ஏற்றுமதி மீதாக கவனம் என்பது குறித்த  தொடக்க அமர்வில் உரையாற்றிய அவர், இந்தியாவின் வளர்ச்சிக்கு அச்சாக ஏற்றுமதியை  உருவாக்குவது அவசியம்  என்பதை  வலியுறுத்தினார். 

நாடுமுழுவதும் உள்ள குடிமைப்பணி அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தமது நல்வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்த திரு கோயல், நாட்டு நலனுக்காக தங்களின் அர்ப்பணிப்பை குடிமைப்பணி அதிகாரிகள் புதுப்பித்துக் கொள்வதற்கான தினமாக இது உள்ளது என்று குறிப்பிட்ட அவர், மக்கள் சேவைக்கு  அவர்களின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார்.  நீங்கள் எடுக்கும் முடிவு, செயல்பாடு, உங்களின் கையெழுத்து ஆகியவற்றால் லட்சக் கணக்கான மக்கள் மீது தாக்கத்தை செலுத்துகிறது என்பதில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் என்று அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார்.

2021-ல் உலகளாவிய பொருட்கள் வர்த்தகத்தில் நமது பங்கு 3 சதவீதத்திற்கு கீழ் இருந்ததை குறிப்பிட்ட அமைச்சர், தற்போது வளர்ச்சிக்கு அதிகமான வாய்ப்புள்ளது என்றார்.  இது நடப்பதற்கு மத்திய – மாநில அரசுகள் இணைந்து பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், மாவட்ட ஆட்சியர்கள் அவரவர் மாவட்டங்களில் ஏற்றமதியை ஊக்கப்படுத்த வேண்டும் கூறினார்.  மருந்துப் பொருட்கள் ஆய்வு கூட்டுறவு  திட்டத்தில் உறுப்பினராவதற்கு இந்தியா முயற்சி செய்ய வேண்டும் என்று திரு கோயல் கூறினார்.  இதன்மூலம் நமது மருந்துப் பொருட்கள் ஏற்றுமதியை 200 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்த முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1818447

***************


(Release ID: 1818468) Visitor Counter : 138


Read this release in: English , Urdu , Hindi , Telugu