பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
2022 மார்ச் மாதத்திற்கான மாதாந்திர உற்பத்தி அறிக்கை
Posted On:
20 APR 2022 2:21PM by PIB Chennai
கச்சா எண்ணெய் உற்பத்தி
2022 மார்ச் மாதத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தி 2526.11 டிஎம்டி (ஆயிரம் மெட்ரிக் டன்) ஆக இருந்தது. இது இந்த மாதத்திற்கான இலக்கை விட 12.49% குறைவாகும். மேலும் 2021 மார்ச் மாத உற்பத்தியை விட 3.37% குறைவாகும்.
2021-22 ஏப்ரல் - மார்ச் காலத்தில் மொத்த கச்சா எண்ணெய் உற்பத்தி 29,690.78 டிஎம்டி ஆக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே காலத்தின் உற்பத்தி இலக்கை விட 11.67% குறைவு; உற்பத்தியை விட 2.63% குறைவு.
இயற்கை எரிவாயு உற்பத்தி
2022 மார்ச்சில் இயற்கை எரிவாயு உற்பத்தி 2,886.23 எம்எம்எஸ்சிஎம் (மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்ட் கன மீட்டர்) ஆக இருந்தது. இது 2022 மார்ச் உற்பத்தியை விட 7.46% அதிகமாகும். ஆனால் மாதாந்திர இலக்கை விட 15.49% குறைவாகும்.
2021-22 ஏப்ரல் - மார்ச் காலத்தில் மொத்த இயற்கை எரிவாயு உற்பத்தி 34023.52 எம்எம்எஸ்சிஎம் (மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்ட் கன மீட்டர்) ஆக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே காலத்தை விட 18.66% அதிகமாகும். ஆனால் இந்த காலத்திற்கான இலக்குடன் ஒப்பிடுகையில் 9.65% குறைவாகும்.
சுத்திகரிக்கப்பட்ட கச்சா எண்ணெய்
2022 மார்ச் மாதத்தில் சுத்திகரிக்கப்பட்ட கச்சா எண்ணெய் 22,336.69 டிஎம்டி (ஆயிரம் மெட்ரிக் டன்) ஆக இருந்தது. இது 2021 மார்ச்சை விட 6.44% அதிகமாகும். ஆனால் இந்த மாதத்திற்கான இலக்கை விட 0.26% அதிகமாகும்.
2021-22 ஏப்ரல் – மார்ச் காலத்தில் மொத்தம் சுத்திகரிக்கப்பட்ட கச்சா எண்ணெய் 2,41,703.50 டிஎம்டி-ஆக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே காலத்தின் உற்பத்தியை விட 8.99% அதிகமாகும், இந்த காலத்திற்கான இலக்கை விட 0.97% அதிகமாகும்.
பெட்ரோலியப் பொருட்களின் உற்பத்தி
2022 மார்ச் மாதத்தில் பெட்ரோலியப் பொருட்களின் உற்பத்தி 241555.17 டிஎம்டி ஆக இருந்தது. இது இம்மாதத்திற்கான இலக்கை விட 3.26 சதவீதமும், 2021 மார்ச் உற்பத்தியை விட 5.80 சதவீதமும் அதிகமாகும். 2021-22 ஏப்ரல் – மார்ச் காலத்தில் மொத்த உற்பத்தி 2,54,313.46 டிஎம்டி ஆக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் உற்பத்தியோடு ஒப்பிடுகையில் 8.91 சதவீதம் அதிகமாகும், இந்த காலத்திற்கான இலக்கை விட 1.81 சதவீதம் அதிகமாகும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1818347
***************
(Release ID: 1818385)
Visitor Counter : 169