புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

மின்கலன் எரிசக்தி அமைப்புகளுக்கான ஒப்பந்தங்களை இந்திய சூரியசக்தி நிறுவனம் கோரியுள்ளது

Posted On: 16 APR 2022 4:03PM by PIB Chennai

புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத் துறை நிறுவனமான இந்திய சூரியசக்தி நிறுவனம் (எஸ் ஈ சி ஐ), இந்தியாவில் 500 மெகா வாட்/1000 எம் டபுள்யூ எச் தனித்த மின்கல எரிசக்தி சேமிப்பு அமைப்புகளை நிறுவுவதற்கான ஒப்பந்தங்களை கோரியுள்ளது. 

நாட்டிலேயே முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம், மின்சார விநியோக நிறுவனங்களின் "தேவைக்கு ஏற்ப" பயன்படுத்தக்கூடிய சேமிப்பு வசதிகளை வழங்கும்.

மார்ச் 2022-ல் மின்சார அமைச்சகம் வழங்கிய நிலையான ஏல வழிகாட்டுதல்களின் கீழ் இது வெளியிடப்பட்டுள்ளது.  இந்த வசதிகள் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஐ எஸ் டி எஸ் நெட்வொர்க்கின் ஃபதேகர்-III தொகுப்பு துணை மின்நிலையத்திற்கு அருகில் நிறுவப்படும். 

திட்டங்களின் கால அளவு 12 ஆண்டுகளாக இருக்கும். தேசிய அளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பயன்பாட்டை அதிகரிப்பதன் ஒரு பகுதியாக, 4000 மெகாவாட் பேட்டரி சேமிப்புத் திறனை அமைக்கும் அரசின் உடனடி இலக்கின் முதல் தவணையை இந்த டெண்டர் குறிக்கிறது. 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1817294  

----(Release ID: 1817313) Visitor Counter : 210


Read this release in: English , Urdu , Hindi