குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

அயோத்தி ராம் நகரி சென்ற குடியரசு துணைத்தலைவர், “நீண்டகால கனவு நிறைவேறுகிறது“ என்று தெரிவித்துள்ளார்

Posted On: 15 APR 2022 5:15PM by PIB Chennai

குடியரசு துணைத்தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு, தமது மனைவி திருமதி உஷா நாயுடுவுடன், வரலாற்றுச் சிறப்புமிக்க அயோத்தி மாநகருக்குச் சென்று, அங்குள்ள ராமபிரான் அவதரித்த இடம் மற்றும் ஹனுமன் கர் கோவிலில் பூஜை செய்து வழிபட்டார்.  

சிறப்பு ரயில் மூலம் அயோத்தி வந்த திரு.நாயுடு-வை, அயோத்தி ரயில் நிலையத்தில், உத்தரப்பிரதேச ஆளுனர் திருமதி.ஆனந்திபென் படேல், துணை முதலமைச்சர் திரு.கேசவ் பிரசாத் மவுரியா உள்ளிட்டோர் வரவேற்றனர். 

குடியரசு துணைத்தலைவர் மற்றும் அவரது மனைவி, ராம்ஜென்ம பூமி-க்கு வந்ததும், புதிதாக கட்டப்படும் ராமர்கோவில் குறித்து,  ராம் ஜென்ம பூமி தீர்த்த அறக்கட்டளை உறுப்பினர்கள், 3-டி குறும்படம் வாயிலாக விரிவாக விளக்கிக் கூறினர்.  பின்னர் திரு.நாயுடு, ராமர்கோவில் கட்டப்படும் இடத்தில் உள்ள கர்ப்பகிரகஹத்தில் பூஜை நடத்தியதுடன், ராம் லல்லா-விலும் வழிபாடு செய்தார்.  

அங்குள்ள பார்வையாளர் புத்தகத்தில் குறிப்பு எழுதிய அவர் :  -      “இன்று ராம்ஜென்ம பூமியைப் பார்வையிடும் வாய்ப்புக் கிடைத்தது.  ராமபிரான் நமது கலாச்சாரம், நற்பண்புகள் மற்றும் செழுமையான வரலாற்றின் அடையாளமாகத் திகழ்கிறார்.  மரியாடா புருஷோத்தமனின் வாழ்க்கை, இந்திய மக்களுக்கு எப்போதும் உத்வேகம் அளிப்பதுடன், அவர்களுக்கான சரியான பாதையையும் காட்டுகிறது.   அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோவில் கட்டுவது, இந்தியாவில் ஆண்மீக மறுமலர்ச்சியின் அடையாளமாகக் கருதப்படுகிறது.  இந்தக் கோவில், நமது செழுமையான பாரம்பரியத்தைப் போற்றும்படி வருங்கால சந்ததியினருக்கு உத்வேகம் அளிப்பதோடு, உண்மை, நீதி மற்றும் சகோதரத்துவத்திற்கான பாதையையும் காட்டும்என்று குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் திரு.நாயுடுவும், அவரது மனைவியும், அயோத்தியில் உள்ள அனுமார் கோவிலிரும் வழிபட்டனர்.  ராமபிரான் இலாங்கையிலிருந்து திரும்பிய பிறகு, அனுமன் இந்த இடத்திலிருந்து தான் அயோத்தி மாநகரைப் பாதுகாத்ததாக நம்பப்படுகிறது.  

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1817088



(Release ID: 1817101) Visitor Counter : 142


Read this release in: English , Urdu , Hindi , Marathi