சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
கர்நாடகா மாநிலம் தாவாங்கேரேவில் மண்டல திறன் பயிற்சி மையத்திற்கு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் நாளை அடிக்கல் நாட்டுகிறார்.
प्रविष्टि तिथि:
15 APR 2022 5:12PM by PIB Chennai
கர்நாடகாவில் உள்ள தாவங்கேரேவில் திறன் மேம்பாடு, மறுவாழ்வு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான அதிகாரமளித்தலுக்கான ஒருங்கிணைந்த பிராந்திய மையத்தின் புதிய கட்டிடத்திற்கு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், 16 ஏப்ரல், 2022 அன்று அடிக்கல் நாட்டுவார்.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் திரு ஏ நாராயணசாமி, தாவாங்கேரே தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஜி எம் சித்தேஸ்வரா உள்ளிட்டோர் இதில் கலந்து கொள்கின்றனர்.
இந்நிகழ்ச்சியில் தகுதியுடைய 492 பயனாளிகளுக்கு உதவிகள், உபகரணங்கள், கற்பித்தல் கற்றல் கருவிகள் மொத்தம் ரூ 41,48,332 மதிப்பீட்டில் வழங்கப்படும்.
மாற்றுத்திறனாளிகளுக்கான திறன் மேம்பாடு, மறுவாழ்வு மற்றும் அதிகாரமளித்தல் ஆகியவற்றிற்கான ஒருங்கிணைந்த பிராந்திய மையம், சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளிக்கும் துறையால் நிறுவப்பட்டுள்ளது.
சொந்த கட்டிடம் இல்லாததால், அதிக எண்ணிக்கையிலான மாற்றுத்திறனாளிகளை சேவைகளின் மூலம் பயனடையச் செய்வதில் இம்மையம் சிரமங்களை எதிர்கொண்டது. இதைத் தொடர்ந்து நிரந்தர கட்டிடம் கட்டுவதற்காக கர்நாடக மாநில அரசிடம் நிலத்தை ஒதுக்கீடு செய்யக் கோரப்பட்டது. நிலம் ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து பல்வேறு வசதிகளோடு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1817086
*******
(रिलीज़ आईडी: 1817099)
आगंतुक पटल : 246