வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

ஜவுளித்துறையில் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை பெறுவதற்காக பெறப்பட்ட 67 விண்ணப்பங்களில் 61 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல்


பருத்தி மீதான இறக்குமதி வரியை பூஜ்ஜியமாகக் குறைத்தது அரசு

Posted On: 14 APR 2022 4:58PM by PIB Chennai

மத்திய ஜவுளித்துறை செயலாளர் திரு. யு.பி.சிங் தலைமையில் நடைபெற்ற தேர்வுக்குழு கூட்டத்தில்,  ஜவுளித்துறையில் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை பெறுவதற்காக வரப்பெற்ற விண்ணப்பங்களில் 61 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டன.  மொத்தம் வரப்பெற்ற 67 விண்ணப்பங்களில், பகுதி-1ல் 15 விண்ணப்பங்களும், பகுதி-2ல் 52 விண்ணப்பங்களும் பெறப்பட்டன.  

பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய ஜவுளித்துறை செயலாளர் திரு.யு.பி.சிங், ஊக்கத்தொகை பெற தேர்ந்தெடுக்கப்பட்ட 61 விண்ணப்பங்கள் மூலம், மொத்த முதலீடு ரூ.19,077 கோடியாகவும்,  5 ஆண்டுகளில் 184,917 கோடி அளவிற்கு விற்றுவரவும்,  240,134 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகக் கூறினார். 

இரண்டு பகுதிகளைக் கொண்ட இத்திட்டத்தில்,   பகுதி-1ல் குறைந்தபட்ச முதலீடாக ரூ.300 கோடியும், ஊக்கத்தொகை பெறுவதற்கான விற்றுவரவு ரூ.600கோடியாகவும் இருக்கும்,   பகுதி-2ல் குறைந்தபட்ச முதலீடாக ரூ.100 கோடியும், ஊக்கத்தொகை பெறுவதற்கான விற்றுவரவு ரூ.200கோடியாகவும் இருக்கும்.  

ஐந்தாண்டுகளில் ரூ.10,863 கோடி  நிதி செலவினம் உடையதாக மாற்றும் வகையில்,  இந்தியாவின் உற்பத்தித் திறன் மற்றும் ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக, ஜவுளித்துறையில்  எம்எம்எப் அப்பேரல், எம்எம்எப் பேப்ரிக்ஸ் மற்றும் தொழில்நுட்ப ஜவுளிப் பொருட்கள், உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை பெறுவதற்காக அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  ஜவுளித்துறையை மேலும் வளர்ச்சியடையச் செய்யும் விதமாக,  பருத்தி மீதான இறக்குமதி வரியையும் அரசு ரத்து செய்துள்ளது

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பைக் காணவும் :  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1816795

----



(Release ID: 1816842) Visitor Counter : 195