பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்குடன் நாகாலாந்து முதலமைச்சர் திரு நெபியு ரியோ பல்வேறு விஷயங்கள் குறித்து நேரில் ஆலோசனை

இடுகை இடப்பட்ட நாள்: 14 APR 2022 3:30PM by PIB Chennai

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு),  புவி அறிவியல் துறை இணையமைச்சர்  (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம்பணியாளர்கள்பொதுமக்கள் குறைகள்ஓய்வூதியங்கள்அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர்டாக்டர் ஜிதேந்திர சிங்கை நாகாலாந்து முதலமைச்சர் திரு நெபியு ரியோ சந்தித்துப் பேசினார்

அகில இந்திய சேவைகள் அதிகாரிகளின் மேம்பாடு முதல் பணியமர்த்துதல் வரை மாநிலம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் பற்றி இந்த சந்திப்பின் போது விவாதித்தார்.

வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியில்  டாக்டர் ஜிதேந்திர சிங் தீவிர ஆர்வம் மற்றும்   கவனம் செலுத்துவதை திரு நெபியு ரியோ பாராட்டினார்.

மேலும்,  அம்மாநில மக்கள் அவரை எப்போதும் தேசிய தலைநகரில் உள்ள தங்கள் தூதராகப் பார்ப்பதாகவும்,  தங்கள் மாநிலத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அவர் எப்போதும் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நாகாலாந்தில் ஐஏஎஸ் அதிகாரிகளின் பிரதிநிதித்துவம் மற்றும் பணியமர்த்தல் தொடர்பான சில பிரச்சினைகள் குறித்து அம்மாநில முதலமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கின் கவனத்திற்கு கொண்டு வந்தார்இதற்குப் பதிலளித்த டாக்டர் ஜிதேந்திர சிங்இந்தப் பிரச்சினைகள் அனைத்தையும் உரிய முறையில் பரிசீலலித்துமேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயுமாறு துறை சார்ந்த  அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

நாகாலாந்து மாநிலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சரிடம் அம்மாநில முதலமைச்சர் ஆலோசித்தார்நாகலாந்து முதலமைச்சரின் கோரிக்கைகள் குறித்து தனது அலுவலகம் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும் என்று டாக்டர் சிங் கூறினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு உயர் முன்னுரிமை அளித்து வருவதன்  காரணமாகவேதற்போது அப்பகுதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.மேலும்வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியை நாட்டிலுள்ள பிற மாநிலங்கள் கவனித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்குஇந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1816769

----


(வெளியீட்டு அடையாள எண்: 1816790) வருகையாளர் எண்ணிக்கை : 142
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Manipuri