குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
வைசாகி, விஷு, புத்தாண்டு, மேஷாதி, வைசாகடி மற்றும் பஹாக் பிஹு பண்டிகைகளை முன்னிட்டு மக்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் வாழ்த்து
Posted On:
13 APR 2022 6:05PM by PIB Chennai
வைசாகி, விஷு, புத்தாண்டு, மேஷாதி, வைஷ்காதி மற்றும் பஹாக் பிஹு பண்டிகைகளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
"வைசாகி, விஷு, புத்தாண்டு, மேஷாதி, வைஷ்காதி மற்றும் பஹாக் பிஹு ஆகிய மகிழ்ச்சியான தருணத்தை முன்னிட்டு நம் நாட்டு மக்களுக்கு எனது அன்பான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாரம்பரியமாக அறுவடை காலத்துடன் தொடர்புடைய இந்த திருவிழாக்கள் இயற்கையைக் கொண்டாடுகின்றன. இந்திய கலாச்சாரத்தின் செழுமையையும் பன்முகத்தன்மையையும் அவை பிரதிநிதித்துவப்படுத்துவதோடு இயற்கை மற்றும் அனைத்து உயிரினங்களுடனும் இணக்கமான சகவாழ்விற்கான நமது நாகரீக விழுமியங்களின் உண்மையான பிரதிபலிப்பாகவும் திகழ்கின்றன.
நம் வாழ்வில் அமைதியையும், வளத்தையும், மகிழ்ச்சியையும் இந்த பண்டிகைகள் வழங்கட்டும்," என்று தமது வாழ்த்து செய்தியில் குடியரசுத் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1816491
***************
(Release ID: 1816556)
Visitor Counter : 128