அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
குவாண்டம் பரிசோதனைகளுக்கு தேவையான உலகளாவிய திட்டமிடும் நடைமுறையை வழங்கக்கூடிய அடிப்படை இயற்பியலை பரிசோதிக்க குவாண்டம் கணினிகள் உதவும்
Posted On:
13 APR 2022 2:32PM by PIB Chennai
வழக்கமான கணினிகளை விட, கொடுக்கும் பணிகளை மிக விரைவாக செய்து முடிக்கும் திறன் பெற்றவை குவாண்டம் கணினிகள் என்பதையும் தாண்டி, ஒரு புதுமையான நோக்கத்திற்காக விஞ்ஞானிகள் முதன்முறையாக குவாண்டம் கணினிகளை பயன்படுத்தியுள்ளனர். தங்களது பணிசார்ந்த அடிப்படை கோட்பாட்டை நேரடியாக பரிசோதிக்க இவர்கள் புதிய தலைமுறை கணினிகளை பயன்படுத்தியுள்ளனர்.
மற்ற இயற்பியல் கோட்பாடுகளை போலவே குவாண்டம் இயக்கவியலும் பரிசோதனைகளின் அடிப்படையில் அமைந்ததாகும். இதன் பொருள் யாதெனில், முழுமையான கோட்பாடு எதிலிருந்து தருவிக்கப்பட்டது என்பதை உரிய ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தும் பரிசோதனையாகும். விஞ்ஞானிகளில் பெரும்பாலானோர் குவாண்டம் கணினி பயன்பாட்டியல் சாதனங்களை உருவாக்குவதில் முதலீடு செய்துள்ள நிலையில் மற்றொரு தரப்பினர் குவாண்டம் கோட்பாட்டில் அடிப்படை அம்சங்களை துல்லியமாக பரிசோதிப்பதில் முதலீடு செய்துள்ளனர்.
குவாண்டம் தத்துவத்திற்கான முக்கியமான பரிசோதனைகளை மேற்கொள்ள குவாண்டம் கணினிகளை பயன்படுத்துவது, இயற்கையாகவே இயற்பியல் விஞ்ஞானிகளுக்கு முழுமையான புதிய ஆராய்ச்சிக்கான வழியை காட்டுவதாக அமைந்திருப்பதுடன் ஆராய்ச்சி சார்ந்த பல்வேறு பிரிவுகளை ஒரே குடையின்கீழ் ஒன்றிணைக்கவும் வகை செய்கிறது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்.. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1816336
***************
(Release ID: 1816408)