நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

16 கோடிக்கும் மேல் உள்ளீட்டு வரி மோசடி செய்ததற்காக ஒருவர் ஜிஎஸ்டி நுண்ணறிவு இயக்குநரக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

Posted On: 11 APR 2022 5:52PM by PIB Chennai

உரிமையாளர் / இயக்குநர் என்ற பெயரில் ஒரு நபரால்  கட்டுப்படுத்தப்படும் தொடர் நிறுவனங்களான உமாங் ஓவர்சீஸ், உலகர்சன் இம்பெக்ஸ்  ஆகிய நிறுவனங்களின்  முறைகேடுகளை ஜி எஸ் டி  நுண்ணறிவு இயக்குநரகம் (DGGI) குருகிராம் மண்டல பிரிவு (GU), குருகிராம், கண்டுபிடித்துள்ளது. M/s உமாங் இம்பெக்ஸ் பிரைவேட் லிமிடெட், பல்வேறு போலி, இடைநிறுத்தப்பட்ட மற்றும் இல்லாத நிறுவனங்களிடமிருந்து பொருட்களைப் பெறாமல் உள்ளீட்டு வரி வரவு (ITC) பெறுவதில் 16.74 கோடி ரூபாய் அளவிற்கு  முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

04.04.2022 அன்று பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது பல பென் டிரைவ்கள், பல்வேறு நிறுவனங்களின் ரப்பர் ஸ்டாம்புகள், ஆவணங்கள்/பதிவுகள் கைப்பற்றப்பட்டு, வரி ஏய்ப்புக்கான மதிப்பீட்டிற்காக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

 

முறைகேடான வகையில் உள்ளீட்டு வரி வரவைப்  பெற்றுக் கொடுத்ததில் தொடர்புடைய முக்கிய நபர் 05.04.2022 அன்று கைது செய்யப்பட்டு  தலைமைப் பெருநகர மாஜிஸ்திரேட், பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கபட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1815702

***************


(Release ID: 1815757) Visitor Counter : 163


Read this release in: English , Urdu , Hindi