பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக நல்லாட்சி குறித்த தேசிய மாநாட்டை பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் நடத்தவுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
11 APR 2022 5:28PM by PIB Chennai
விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக 2022 ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 17 வரை ஐகானிக் வாரத்தை பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் கொண்டாடுகிறது. இதை முன்னிட்டு, நல்லாட்சி குறித்த தேசிய மாநாட்டை புதுதில்லியில் உள்ள ஸ்கோப் அரங்கில் ஏப்ரல் 12 அன்று அமைச்சகம் நடத்தவுள்ளது.
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள்/ மூத்த அதிகாரிகள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பல்வேறு துறை வல்லுநர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொள்வார்கள்.
கிராமப்புற வளர்ச்சிக்கான திட்டங்களை நிறைவேற்றுவதற்கான கருவிகளாக பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் திகழ்கின்றன. இந்த முயற்சியில், பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் செயல்பாடுகளை மேலும் திறமையானதாக மாற்றுவது முக்கியமானது.
பொருளாதாரத்தின் விரைவான விரிவாக்கம் மற்றும் மக்களிடையே அதிகரித்து வரும் விழிப்புணர்வின் காரணமாக நல்லாட்சிக்கான தேவை அதிகரித்துள்ளது. குடிமக்கள் சார்ந்த, மக்களை மையப்படுத்திய, மக்களுக்கு நட்பான, கிராமப்புற மேம்பாட்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் அர்ப்பணிப்பு, அக்கறை மற்றும் பொறுப்புணர்வை இது வலியுறுத்துகிறது.
மத்திய, மாநில அரசுகள் இணைந்து பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதால், அரசுத் திட்டங்களில் சமூக உள்ளடக்கலை உறுதி செய்வதற்கு மட்டுமல்லாமல், பொறுப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் நல்ல நிர்வாகம் மிகவும் முக்கியமானது. நமது கிராமப்புறங்களில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான இலக்கை அடைய பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கான செயல்முறை உள்ளது. எனவே, இந்த நோக்கத்திற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்டுள்ள பல்வேறு முயற்சிகளை பகிர்ந்து கொள்வதற்கு இந்த மாநாடு பொருத்தமான தளமாக அமையும்.
விடுதலையின் அமிர்தப் பெருவிழா என்பது இந்தியாவின் 75 ஆண்டுகால வளர்ச்சி மற்றும் அதன் மக்கள், கலாச்சாரம் மற்றும் சாதனைகளின் புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்டாடுவதற்கும் நினைவுகூருவதற்குமான இந்திய அரசின் முன்முயற்சியாகும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1815691
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1815754)
வருகையாளர் எண்ணிக்கை : 230