ஜல்சக்தி அமைச்சகம்
நீர்ப்பாசனத் திட்டத்தை தேசிய திட்டமாக அறிவிப்பதற்கான அளவுகோல்கள்
Posted On:
07 APR 2022 5:27PM by PIB Chennai
மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தால் மேற்கொள்ளப்பட்டுவரும் தேசிய திட்டங்களின் கீழ் ஒரு திட்டத்தை சேர்ப்பதற்கான தகுதி குறித்த அளவுகோல்கள் பின்வருமாறு:
i) சர்வதேச திட்டங்கள், நாட்டின் நீர் பயன்பாடு ஒப்பந்தத்தின் மூலம் தேவைப்படும் அல்லது நாட்டின் நலன் கருதி நன்கு திட்டமிடப்பட்டு முன்கூட்டியே அதனை நிறைவேற்றப்பட வேண்டியதன் அவசியம்.
அல்லது,
ii) நதிகள் இணைப்புத் திட்டங்கள் உட்பட, செலவினங்களைப் பகிர்வது, புத்துயிர், மின் உற்பத்திக்கான அம்சங்கள் போன்றவற்றில் மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இழுபறியில் இருக்கும் மாநிலங்களுக்கு இடையேயான திட்டங்கள்.
அல்லது
iii) இரண்டு லட்சம் ஹெக்டேருக்கு மேல் கூடுதல் நீர்ப்பாசனத் திறன் கொண்ட மாநிலங்களுக்கு இடையேயான திட்டங்கள் மற்றும் தண்ணீரைப் பகிர்வது மற்றும் நீரியல் எங்கு நிறுவப்பட்டது என்பதில் எவ்வித சர்ச்சையும் இல்லாத மாநிலங்கள்
அல்லது
iv) விரிவாக்கம், புதுப்பித்தல் மற்றும் நவீனமயமாக்கல் (ERM) போன்ற திட்டங்கள் மூலம் 2 லட்சம் ஹெக்டேர் நீர்ப்பாசனத் திறனை விரிவாக்கம் / மீட்டமைக்க உதவிடும் என்று கருதப்படுகிறது.
எனினும், ஒரு திட்டத்தின் தகுதி அடிப்படையில் அதனை தேசிய அளவிலான திட்டத்தின் கீழ் சேர்ப்பதற்கு உரிமை இல்லை. நீர்ப்பாசனம், வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் பல்நோக்கு திட்டங்களின் நீர் ஆதரத்துறை மற்றும் பல்நோக்குத் திட்டங்களின் படி, முதலீட்டு அனுமதி, உயர் அதிகாரம் கொண்ட வழிகாட்டுதல் குழுவின் பரிந்துரைகள், நிதி இருப்பு மற்றும் அந்த நேரத்தில் அரசின் முன்னுரிமைகள் ஆகியவற்றின் படி சேர்க்கப்பட்டுள்ளது.
தேசிய அளவிலான திட்டத்தின் கீழ் மத்திய அரசு மானியமாக, திட்டத்தின் எஞ்சியுள்ள பணிகளுக்காக மீது வழங்கப்படுகிறது. இது பாசனம் மற்றும் குடிநீருக்கு மட்டுமே பொருந்தும்.
இது தொடர்பான நிதி முறை, கீழே உள்ளது.
நீர்ப்பாசன கூறுகள் இல்லாத நீர் ஆதார திட்டங்கள், அல்லது குடிநீர் வழங்குவதை இலக்காகக் கொண்டவை அல்லது நிலத்தடி நீர் ரீசார்ஜ் மூலம் ஆறுகள்/நீர்த்தேக்கங்கள்/கால்வாய்களில் இருந்து நீரைப் பெறுதல் ஆகியவை திட்டத்திற்கான மேலே குறிப்பிடப்பட்ட தகுதி அளவுகோல்கள் அடிப்படையில் தேசிய அளவிலான திட்டத்தின் கீழ் சேர்க்கப்படும்.
இந்த தகவலை ஜல் சக்தி துறை இணை அமைச்சர் திரு பிஸ்வேஸ்வர் டுடு இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1814506
***************
(Release ID: 1814592)
Visitor Counter : 198