அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

திறந்தவெளி புவிசார் தரவை நோக்கி பணியாற்றுவதற்கு ஊக்கம் அளிக்கப்படும்: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

இடுகை இடப்பட்ட நாள்: 06 APR 2022 3:10PM by PIB Chennai

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.

புவிசார் தரவு மற்றும் தகவல்களை உருவாக்கும் அனைத்து மக்கள், நிறுவனங்கள் மற்றும் அரசு முகமைகள் பரஸ்பரம் நன்மை பயக்கும் வகையில் ஒத்துழைக்கவும், திறந்தவெளியில் இணைக்கப்பட்ட புவிசார் தரவை நோக்கி பணியாற்றவும் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று 2021 பிப்ரவரியில் வெளியிடப்பட்ட புவிசார் தரவு வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.

பிப்ரவரி 15, 2021 அன்று அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை வெளியிட்ட “புவியியல் தரவு மற்றும் வரைபடங்கள் உட்பட புவியியல் தரவு சேவைகளைப் பெறுவதற்கும் தயாரிப்பதற்குமான வழிகாட்டுதல்கள்” படி, எந்தவொரு தனிநபருக்கும் அல்லது ஒரு நிறுவனத்திற்கும் உரிமை வழங்கப்பட மாட்டாது.

எந்தவொரு தனிப்பட்ட அல்லது சட்டப்பூர்வ நிறுவனமும் தடைசெய்யப்பட்ட தன்மையுள்ள எந்த இடத்தையும் வரைபடத்தில்  அடையாளம் காணவோ அல்லது இணைக்கவோ கூடாது.

இவை தவிர வேறு இடங்கள் குறித்த புவிசார் தரவுகளைப் பெற, சேகரிக்க, உருவாக்க, தயாரிக்க, பரப்ப, சேமிக்க, பகிர, வெளியிட, விநியோகம் செய்ய, மேம்படுத்த, டிஜிட்டல் மயமாக்க அனுமதி உண்டு.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1814067

***************


(வெளியீட்டு அடையாள எண்: 1814206) வருகையாளர் எண்ணிக்கை : 144
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu