வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
ஸ்டார்ட் அப்-களை ஊக்குவித்தல்
Posted On:
06 APR 2022 5:23PM by PIB Chennai
புதிய தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் ஸ்டார்ட் அப் இந்தியா முன்முயற்சி 2016 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. புதிதாக தொழில் முனைவோர் நாட்டின் வளர்ச்சிக்கான எஞ்சின்கள் என்பதை உணர்ந்து இந்த முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
2016-17 ஆம் ஆண்டு நிதியாண்டில் அங்கீகரிக்கப்பட்ட புதிய தொழில் முனைவோரின் எண்ணிக்கை 726 ஆக இருந்தது. இது 2021-22 ஆம் நிதியாண்டில் மார்ச் 28 ஆம் தேதி நிலவரப்படி, 66,810 –ஆக அதிகரித்துள்ளது.
ஒவ்வொரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசங்களில் குறைந்தபட்சம் ஒரு ஸ்டார்ட் அப் என சுமார் 50 சதவீத அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட் அப்-களில் 2 ஆம் நிலை மற்றும் 3 ஆம் நிலை நகரங்களை சேர்ந்தவர்களாவார்கள். அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட் அப்-கள் 640 மாவட்டங்களில் உள்ளனர். அவர்கள் 7 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது.
பல்வேறு வகையான 56 துறைகளின் ஸ்டார்ட் அப்-கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 4,500-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப்-கள் நவீன தொழில்நுட்பங்கள் தொடர்பானவை என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணையமைச்சர் திரு சோம் பிரகாஷ் மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்.. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1814146
*************
(Release ID: 1814205)
Visitor Counter : 156