மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
கால்நடை கணக்கெடுப்பு
Posted On:
05 APR 2022 6:15PM by PIB Chennai
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ருபாலா கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பங்களிப்புடன் 20-வது கால்நடை கணக்கெடுப்பை 2019-ம் ஆண்டு மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை நடத்தியது.
பதினாறு வகையான வீட்டு விலங்குகள் மற்றூம் பண்ணை பறவைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. டேப்லெட் கணினிகளைப் பயன்படுத்தி, களத்தில் இருந்து ஆன்லைன் பரிமாற்றம் மூலம் தரவை டிஜிட்டல்மயமாக்கும் முதல் முயற்சியாக 20-வது கால்நடை கணக்கெடுப்பு இருந்தது.
20-வது கால்நடை கணக்கெடுப்பின் குறிப்பிடத்தக்க சில அம்சங்கள் பின்வருமாறு:
* நாட்டில் மொத்த கால்நடைகளின் எண்ணிக்கை 536.76 மில்லியனாக உள்ளது. கால்நடை கணக்கெடுப்பு-2012-ஐ விட இது 4.8% அதிகம்.
* கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் மொத்த கால்நடைகளின் எண்ணிக்கை முறையே 514.11 மில்லியன் மற்றும் 22.65 மில்லியன் ஆகும். கிராமப்புறங்களின் பங்கு 95.78% ஆகவும் நகர்ப்புறங்களின் பங்கு 4.22% ஆகவும் உள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1813802
******
(Release ID: 1813845)
Visitor Counter : 1378