கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
கடல் சார்ந்த அடிப்படைக் கட்டமைப்பில் தனியார் முதலீடு
Posted On:
05 APR 2022 2:49PM by PIB Chennai
நாட்டில் தற்போது பெரும் துறைமுகங்களில் ரூ.36,765.58 கோடி முதலீட்டில் 46 அரசு, தனியார் பங்கேற்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. 2015-ல் தொடங்கப்பட்ட சாகர்மாலா திட்டத்தின் கீழ், சுமார் ரூ.2.63 லட்சம் கோடி முதலீட்டில் 123 அரசு, தனியார் பங்கேற்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இவற்றில் ரூ.44,963 கோடி முதலீட்டில் 29 திட்டங்கள் முடிவடைந்துள்ளன. மேலும், ரூ.50,943 கோடி மதிப்பீட்டில் 31 திட்டங்கள் அமலாக்கத்தில் உள்ளன. எஞ்சிய திட்டங்கள் பல்வேறு நிலைகளில் மேம்படுத்தப்படுகின்றன.
தனியார் துறைமுகங்கள் உள்ளிட்ட பெருந்துறைமுகங்கள் அல்லாதவை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் அதிகார வரம்பிற்குள் இருக்கின்றன. மாநிலங்களவையில், கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் துறைமுகங்கள். கப்பல் போக்குவரத்து, நீர்வழிப்பாதைகள் துறைக்கான துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனாவால் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1813610
****
(Release ID: 1813831)