சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

பயோ-டைஜெஸ்டர் அலகுகள்

Posted On: 04 APR 2022 3:42PM by PIB Chennai

திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2016-ன் படி, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கிராமப் பஞ்சாயத்துக்கள் திடக்கழிவு பதப்படுத்தும் வசதிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உள்கட்டமைப்புகளை சொந்தமாகவோ அல்லது தனியார் துறை பங்கேற்புடன் அல்லது ஏதேனும் முகமை  மூலமாகவோ திடக்கழிவின் பல்வேறு கூறுகளை சிறந்த முறையில் பயன்படுத்துவதற்கான கட்டுமானம், செயல்பாடு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை எளிதாக்கும் வகையிலும்பொருத்தமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலமும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் அவ்வப்போது வழங்கும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் மூலமும், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் பரிந்துரைக்கப்பட்ட தரநிலைகள் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

போக்குவரத்து செலவு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைக்க பரவலாக்கப்பட்ட செயலாக்கத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும்:

 

•             பயோ-மெத்தனேஷன், நுண்ணுயிர் உரமாக்கல், வெர்மி-உரம், காற்றில்லா செரிமானம் அல்லது மக்கும் கழிவுகளின் உயிரி-நிலைப்படுத்துதலுக்கான வேறு ஏதேனும் பொருத்தமான செயலாக்கம்;

•             கழிவுகளின் எரியக்கூடிய பகுதிக்கான  எரிபொருள் அல்லது திடக்கழிவு அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்கள் அல்லது சிமெண்ட் சூளைகளுக்கு வழங்குவது உட்பட, கழிவு முதல் ஆற்றல் வரையிலான செயல்முறைகள்

 

மேலும், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், உள்நாட்டு தொழில்நுட்பங்கள் மற்றும் புதுமையான கழிவு மேலாண்மை நடைமுறைகளை மதிப்பிடுவதற்காக கழிவு மேலாண்மை தொழில்நுட்பத்திற்கான நிலைக்குழுவையும் அமைத்துள்ளது. கழிவு மேலாண்மை தொழில்நுட்பத்தை மதிப்பிடுவதற்கான நெறிமுறையை இக்குழு குழு தயாரித்துள்ளது.

அழுத்தப்பட்ட உயிரிவாயு ஆலைகள் மூலம்  வைக்கோல் குச்சியைப் பயன்படுத்தி உயிர்வாயுவாக மாற்றலாம். திட்ட வழிகாட்டுதல்களின்படி, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் SATAT (மலிவு விலை போக்குவரத்தை நோக்கி நிலையான மாற்று) திட்டத்தின் கீழ் திட்ட வழிகாட்டுதல்கள் அடிப்படையில் அழுத்தப்பட்ட உயிர்வாயு உற்பத்திக்கான ஆலைகள் செயல்பட ஆதரவு அளிக்கப்படும்.

இந்தத் தகவலை சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணை அமைச்சர் திரு அஸ்வினி குமார் சௌபே இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1813179

 

******



(Release ID: 1813373) Visitor Counter : 182


Read this release in: English , Urdu