வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

நடத்தை மாற்றத் திட்டமான தூய்மை இந்தியா இயக்கம் (நகர்ப்புறம்), குப்பையில்லா நகரங்களுக்கு வழிவகுத்துள்ளது

Posted On: 04 APR 2022 3:47PM by PIB Chennai

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் இணை அமைச்சர் திரு கவுஷல் கிஷோர் கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.

2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி அனைத்து சட்டப்பூர்வ நகரங்களும் 2014-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி தொடங்கப்பட்ட தூய்மை இந்தியா இயக்கம்- நகர்ப்புறம் மற்றும் 1 அக்டோபர் 2021 அன்று தொடங்கப்பட்ட தூய்மை இந்தியா இயக்கம்- நகர்ப்புறம் 2.0-ன் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின் கீழ் சுகாதாரம் என்பது மாநிலப் பிரிவில் வருகிறது.. நடத்தை மாற்றத் திட்டமான தூய்மை இந்தியா இயக்கம் (நகர்ப்புறம்), உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மக்களின் பங்களிப்புடன் குப்பையில்லா நகரங்களுக்கு வழிவகுத்துள்ளது.

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்படும் தூய்மை இந்தியா இயக்கம்- நகர்ப்புறம், திடக்கழிவு மேலாண்மையில் பல்வேறு வழிகளில் நகரங்களுக்கு உதவுகிறது. நிதி உதவி, தொழில்நுட்ப நெறிமுறைகள் மற்றும் தரநிலைகள், உள்ளாட்சி அமைப்புகளின் திறன் மேம்பாடு, தகவல், கல்வி மற்றும் தொடர்பாடல் (ஐஈசி) ஆகியவை இதில் அடங்கும்

நடத்தை மாற்றத்திற்கான பிரச்சாரங்கள், நகரங்களின் வருடாந்திர சுகாதார ஆய்வு, தகவல் தொழில்நுட்ப தளங்களான ஸ்வச்சதம் இணையதளம் மற்றும் ஸ்வச்சதா செயலி, குப்பையில்லா நகரங்களின் தரவரிசை, திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லா நகரங்களூக்கான நெறிமுறைகள் முதலியன மேற்கொள்ளப்படுகின்றன.

தூய்மை இந்தியா இயக்கம்- நகர்ப்புறம், தூய்மை இந்தியா இயக்கம்- நகர்ப்புறம் 2.0-ன் வழிகாட்டுதல்களின்படி மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1813186



(Release ID: 1813348) Visitor Counter : 157


Read this release in: English , Urdu