சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

காடு வளர்ப்பிற்கான நிதி

Posted On: 04 APR 2022 3:33PM by PIB Chennai

சட்லெஜ், பியாஸ், ரவி, செனாப், ஜீலம், லூனி, யமுனா, மகாநதி, பிரம்மபுத்திரா, நர்மதா, கோதாவரி, கிருஷ்ணா மற்றும் காவிரிஆகிய 13 முக்கிய நதிகளை புத்துயிர் பெற செய்யும் வகையில் டேராடூனில் உள்ள இந்திய வனவியல், ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் (ICFRE) தயாரித்த விரிவான திட்ட அறிக்கைகளை (DPR) சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளதுஇத்திட்டத்தின் மூலம், நீர்ப்பிடிப்புப் பகுதியில் மரம் வளர்ப்பு, மண் மற்றும் ஈரப்பதத்தை  பாதுகாக்கும் பணிகள் மற்றும் ஆற்றின் முகத்துவார மேம்பாடு, பசுமை மற்றும் கார்பன் ஸிங்க் ஆகியவற்றை அதிகரிக்கவும், வண்டல் மண் படியல்  மற்றும் வெள்ளம் ஆகியவற்றை  குறைக்கவும், நிலத்தடி நீர் சேமிப்பை மேம்படுத்தல், வேலைவாய்ப்பை உருவாக்குதல் ஆகியவையும் அடங்கும்.

இந்த பதின்மூன்று விரிவான திட்ட அறிக்கைகளில் முன்மொழியப்பட்ட திட்டங்களுக்காக  மொத்த நிதி 19,342.62 கோடி ரூபாய்  தேவைப்படுகிறது. 4 முக்கிய கூறுகளின் கீழ் () வனத்துறை தலையீடுகளை செயல்படுத்துதல், () அறிவுசார் மேலாண்மை மற்றும் தேசிய திறன் மேம்பாட்டை வலுப்படுத்துதல், () வெற்றிகரமான மாதிரிகளை அளவிடுதல் மற்றும் நகலெடுப்பது உட்பட பராமரிப்பு பணிகள், மற்றும் () தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் காடு வளர்ப்பு நதி பாதுகாப்பு உள்ளிட்டவை அடங்கும். ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா உட்பட மாநில வாரியாக ஒதுக்கப்பட்ட விவரங்கள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.

பல்வேறு துறைகளின் பங்களிப்புடன் செயல்படுத்தும் வகையில் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு விரிவான திட்ட அறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன. மாநில வனத் துறைகள், வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை, நகர்ப்புற நகராட்சி அமைப்புகள், ஊரக வளர்ச்சித் துறை போன்ற தொடர்புடைய துறைகளுடன் இணைந்து பல்வேறு மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்களின் கீழ் நிதி ஆதாரங்களுடன் இதனை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணை அமைச்சர் திரு அஸ்வினி குமார் சௌபே இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்தத் தகவலை தெரிவித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1813168

 



(Release ID: 1813262) Visitor Counter : 163


Read this release in: English , Urdu