சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

குடும்ப உறுப்பினராக மரங்களை நேசித்தல்

Posted On: 04 APR 2022 3:32PM by PIB Chennai

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை இணை அமைச்சர் திரு அஷ்வினி குமார் சவுபே கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.

வாழ்க்கைக்கான நிலம் (லேண்ட் ஃபார் லைஃப்) என்பது ஐக்கிய நாடுகள் சபையின் பாலைவனமாக்கலுக்கு எதிரான மாநாட்டின் விருது திட்டமாகும். ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் ஒரு முறை இது வழங்கப்படுகிறது.

நிலையான நில மேலாண்மை மூலம் நிலையான வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு உலகளாவிய அங்கீகாரத்தை வழங்குவதை லேண்ட் ஃபார் லைஃப் விருது நோக்கமாகக் கொண்டுள்ளது. ஃபெமிலியல் ஃபாரெஸ்ட்ரி ஆஃப் ராஜஸ்தானுக்கு ஜூன் 17, 2021 அன்று இந்த விருது வழங்கப்பட்டது.

ஃபெமிலியல் ஃபாரெஸ்ட்ரி எனப்படும் குடும்ப வனவியல் என்பது ஒரு குடும்ப உறுப்பினராக மரத்தை பராமரிப்பதாகும். இதனால்  குடும்பத்தின் ஒரு பகுதியாக மரம் மாறும். ஃபெமிலியல் ஃபாரெஸ்ட்ரி ஆஃப் ராஜஸ்தான் இயக்கம் பாலைவனம் நிறைந்த வடமேற்கு ராஜஸ்தானின் 15,000-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஒரு மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்களை உள்ளடக்கியது.

 

கடந்த 15 ஆண்டுகளில் சுமார் 2.5 மில்லியன் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன, மாணவர்கள் மற்றும் பாலைவன வாசிகளின் தீவிர பங்களிப்புடன் இது செய்யப்பட்டுள்ளது.

தேசிய காடு வளர்ப்புத் திட்டம், பசுமை இந்தியாவுக்கான தேசியத் திட்டம் போன்ற மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்தின் திட்டங்கள் பாலைவனமாக்கல் மற்றும் நிலச் சீரழிவை எதிர்த்துப் போராடுவதற்கு வழிவகுக்கும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1813165

 

*****



(Release ID: 1813261) Visitor Counter : 181


Read this release in: English , Urdu