தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உபரி தொழிலாளர் சக்தி

Posted On: 04 APR 2022 3:36PM by PIB Chennai

அதிகபட்ச உற்பத்திக்கும், உற்பத்தித் திறனுக்குமான சூழலை உருவாக்க இந்தியாவின் தொழிலாளர் சக்தியைப் பாதுகாக்கவும், அவர்களின் நலன்களைப் பாதுகாக்கவும் அரசு உறுதிபூண்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் திரு.ராமேஷ்வர் தெலி கூறியுள்ளார்.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதிலளித்த அவர், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கிடைக்கவும், தொழிற்சாலையில் பாதுகாப்பை உறுதி செய்யவும் ஆரோக்கியமான தொழில் நிலைகளை உருவாக்கவும், சமூகப் பாதுகாப்பை வழங்கவும் மத்திய அரசு பல தொழிலாளர் சட்டங்களை இயற்றியுள்ளதாக தெரிவித்தார்.

உபரியாக உள்ள தொழிலாளர்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு புலம்பெயர்ந்து செல்வது தொடர்ச்சியான நடைமுறையாக உள்ளது. சிறந்த வாழ்வாதாரத்தை தேடி அவர்கள் இடம்பெயர்ந்து செல்கிறார்கள். மாநிலங்களுக்கு இடையே இடம்பெயர்ந்து செல்லும் தொழிலாளர்களின் தொழில் நிலைமை, சுகாதாரம், தொழிற்சாலையில் பாதுகாப்பு ஆகியவற்றை சேர்ப்பதற்காக 1979 ஆம் ஆண்டின் சட்டத்தில், 2020 ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1813172

***************


(Release ID: 1813220) Visitor Counter : 244


Read this release in: English , Urdu