நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2021-22ம் நிதியாண்டில் மத்திய நேரடி வரி வாரியம் 62 முன்கூட்டிய விலை ஒப்பந்தங்களில் கையெழுத்து

प्रविष्टि तिथि: 31 MAR 2022 4:11PM by PIB Chennai

மத்திய நேரடி வரி வாரியம், 2021-22ம் நிதியாண்டில், வரி செலுத்துவோருடன், 62 முன்கூட்டிய விலை ஒப்பந்தங்களை (ஏபிஏ) செய்துள்ளது. இதில் 13 இருதரப்பு முன்கூட்டிய விலை ஒப்பந்தங்கள் மற்றும் 49 ஒருதலைபட்சமான  முன்கூட்டிய விலை ஒப்பந்தங்கள் உள்ளன.  இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இதுவரை மேற்கொள்ளப்பட்ட மொத்த ஒப்பந்தங்களின் எண்ணிக்கை 421.

கோவிட்-19 தொற்று காரணமாக இடையூறுகள் ஏற்பட்ட போதிலுமு்நிதியாண்டின் முதல் பகுதியில் , இதற்கு முந்தைய இரு ஆண்டுகளை விட அதிக ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. 2020-21-ம் நிதியாண்டில், 31 ஏபிஏக்களும், 2019-20ம் ஆண்டில் 57 ஏபிஏக்களும் கையெழுத்திடப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1811928

                                ****************************


(रिलीज़ आईडी: 1812147) आगंतुक पटल : 206
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी