புவி அறிவியல் அமைச்சகம்
கடந்த சில ஆண்டுகளாக இமயமலையில் பனிப்பொழிவு குறைவாகவும், மழைப்பொழிவு அதிகமாகவும் உள்ளதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
Posted On:
31 MAR 2022 3:30PM by PIB Chennai
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.
கடந்த சில ஆண்டுகளாக இமயமலையில் பனிப்பொழிவு குறைவாகவும், மழைப்பொழிவு அதிகமாகவும் உள்ளதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
மேற்கு இமயமலையின் நான்கு பனிப்பாறை படுகைகளில் (சந்திரா, பாகா, மியார் மற்றும் பார்வதி) 1979 முதல் 2018 வரை ஒட்டுமொத்த மழைப்பொழிவு குறைந்து வருவதை புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தின் ஆய்வுகள் காட்டுகின்றன..
இருப்பினும், இந்தப் போக்கு ஒரே மாதிரியாக இருக்கவில்லை. மேலும், பனிப்பொழிவு குறையும் போது, இந்த பனிப்பாறை படுகையில் திரவப்பொழிவு (மழை) அதிகரித்து வருவதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
வசந்த காலத்தில் பனிப்பொழிவுக்கு பதிலாக மழைப்பொழிவு அதிகரிப்பது பனிப்பாறைகளை முன்கூட்டியே வெளிப்படுத்த வழிவகுக்கும், பனிப்பாறைகள் உருகும் வீதத்தை இது மேம்படுத்துவதோடு, பனிச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளங்களின் எண்ணிக்கை மற்றும் அளவை துரிதப்படுத்தலாம்.
பனிச்சரிவு, நிலச்சரிவு போன்றவை தடுக்க முடியாத இயற்கை நிகழ்வுகள் ஆகும். இருப்பினும், புவி அறிவியல் அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள பல்வேறு நிறுவனங்களால் மழை மற்றும் பனிப்பொழிவுக்கான முன்னெச்சரிக்கை மற்றும் முன்னறிவிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1811916
**************************
(Release ID: 1812138)
Visitor Counter : 151