குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான ஏற்றுமதி கொள்கை
Posted On:
31 MAR 2022 12:51PM by PIB Chennai
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை இணை அமைச்சர் திரு. பானு பிரதாப் சிங் வர்மா கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.
சர்வதேச சந்தைகளில் ஏற்றுமதியாளர்களின் ஊடுருவல் மற்றும் நிலைத்தன்மை தொடர்பான செலவுகளைக் குறைப்பதற்கான ஊடகமாக மின்-வணிகம் பரவலாகக் கருதப்படுகிறது. மின்-வணிக தளங்களால் வழங்கப்படும் மேம்படுத்தப்பட்ட தெரிவு நிலையிலிருந்து இந்திய சிறு, குறு, நடுத்தர தொழில்கள் பயனடைகின்றன.
மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு, போட்டி சார்ந்த விலை நிர்ணயம், டிஜிட்டல் தளத்தின் மூலம் தயாரிப்புகளின் சந்தைப்படுத்தல் மற்றும் குறைந்த செலவுகள் ஆன்லைன் விற்பனையை மேம்படுத்த பங்களிக்கின்றன.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் ஏற்றுமதியை அதிகரிக்க இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், தொழில் தொடங்குவதை எளிதாக்குதல், முத்ரா, ஸ்டாண்ட் அப் இந்தியா போன்றவை இதில் அடங்கும்.
மேலும், நாடு முழுவதும் 52 ஏற்றுமதி வசதி மையங்களை அமைச்சகம் நிறுவியுள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வெளிநாட்டு சந்தைக்கு ஏற்றுமதி செய்வதில் தேவையான வழிகாட்டுதல் மற்றும் ஆதரவை வழங்கும் நோக்கத்துடன் 102 தொழில் மேம்பாட்டு மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
இத்துறையில் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் சந்தைத்தன்மையை மேம்படுத்துவதற்காக சர்வதேச ஒத்துழைப்புத் திட்டத்தையும் அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. வெளிநாடுகளில் நடைபெறும் சர்வதேச கண்காட்சிகள், வர்த்தக கண்காட்சிகள், வாங்குபவர்-விற்பனையாளர் சந்திப்பு, இந்தியாவில் சர்வதேச மாநாடுகள், கருத்தரங்குகள், பட்டறைகளை நடத்துதல் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1811827
*********************
(Release ID: 1812111)