பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
மத்திய தகவல் ஆணையத்தில் நிலுவையில் உள்ள 2-ஆவது மேல்முறையீடுகள்
Posted On:
31 MAR 2022 3:18PM by PIB Chennai
மத்திய தகவல் ஆணையத்தில் 01.04.2021 நிலவரப்படி 38,116 இரண்டாவது மேல்முறையீடுகள் மற்றும் புகார்களும், 31.01.2022 நிலவரப்படி 31,025 மேல்முறையீடுகளும் நிலுவையில் இருந்ததாக மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்வு மற்றும் ஓய்வூதிய துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ள அவர், தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ல் இரண்டாவது மேல்முறையீடுகளை தீர்த்து வைப்பதற்கு கால வரம்பு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார். எனினும், நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காண மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும். https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1811913
***************
(Release ID: 1812102)
Visitor Counter : 217