வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நகரங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய்கள் மூலம் நீர் வழங்குவதையும், கழிவுநீர் மேலாண்மையைப் பாதுகாப்பதையும் அம்ருத் 2.0 நோக்கமாகக் கொண்டுள்ளது: தமிழகம் குறித்த தகவல்கள்

Posted On: 31 MAR 2022 2:35PM by PIB Chennai

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் இணை அமைச்சர் திரு .கவுஷல் கிஷோர் கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.

புத்தாக்கம் மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான அடல் மிஷன் 2.0 (அம்ருத் 2.0) திட்டம்                      1 அக்டோபர், 2021 அன்று 5 ஆண்டுகளுக்கு அதாவது 2021-22 நிதியாண்டு முதல் 2025-26 நிதியாண்டு வரை தொடங்கப்பட்டது.

நாட்டில் உள்ள அனைத்து நகரங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய்கள் மூலம் நீர் வழங்கல் மற்றும் அம்ருத் திட்டத்தின் முதல் கட்டத்தில் 500 நகரங்களில் கழிவுநீர் மேலாண்மை பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்காக அம்ருத் 2.0 வடிவமைக்கப்பட்டுள்ளது.

அம்ருத் 2.0-க்கான மொத்த செலவு ரூ 2,99,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கான மத்திய அரசு செலவான ரூ 76,760 கோடியும் இதில் அடங்கும். மார்ச் 2023 வரை அம்ருத்தின் தற்போதைய திட்டங்களுக்கான ரூ 22,000 கோடி (மத்திய உதவி ரூ 10,000 கோடி) நிதியும் இந்த செலவினத்தில் அடங்கும்.

தமிழ்நாட்டில் திட்டங்களுக்கான மத்திய நிதி ஒதுக்கீடு ரூ 4935 கோடி ஆகும், நிர்வாகம் மற்றும் அலுவலக செலவுகளுக்கான ஒதுக்கீடு ரூ 160.36 கோடி ஆகும்.

புதுச்சேரியில் திட்டங்களுக்கான மத்திய நிதி ஒதுக்கீடு ரூ 150 கோடி ஆகும், நிர்வாகம் மற்றும் அலுவலக செலவுகளுக்கான ஒதுக்கீடு ரூ 4.87 கோடி ஆகும்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1811880

                           ********************

 

 


(Release ID: 1812077)
Read this release in: English